news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கார் பருவ சாகுபடிக்காக காரையார் அணையில் நீர் திறப்பு... அணையின் ஷட்டரை திறந்து விட்ட சபாநாயகர் அப்பாவு
tv

Also Watch

tv

Read this

கார் பருவ சாகுபடிக்காக காரையார் அணையில் நீர் திறப்பு... அணையின் ஷட்டரை திறந்து விட்ட சபாநாயகர் அப்பாவு

பாபநாசம், நெல்லை

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nellai district

நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையார் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கான தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து விட்டார்.

இம்மாவட்டத்தில் உள்ள காரையார், சேர்வலார் மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

அதன்படி, காரையார் அணையில் இருந்து, 800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து அக்டோபர் 2-ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

இதன்மூலம், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சுமார் 46 ஆயிரத்து 786 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைய உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நெஞ்சை அடைக்கும் துயரத்துடன் அஞ்சலி செலுத்த வந்த ரஜினிகாந்த்

4
50 mins agoshare
Rajinikanthbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau