news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு
tv

Also Watch

tv

Read this

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு

வெள்ளி விலையில் மாற்றமில்லை

3

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் அதிரடியாக உயர்ந்து, சென்னையில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 370 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தின் விலை உயர்ந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 23
ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,560க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,480க்கு விற்பனை ஆனது. தங்கத்தின் விலையை போல, வெள்ளி விலையும் ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.250க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 24
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,680 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 6,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 210 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,350 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 40,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 25
ஒரு சவரனுக்கு 1,680 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 5,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 210 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,140 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 230 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 30,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 26
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல் வெள்ளி விலை கிராமுக்கு ஒரே நாளில் 15 ரூபாய் அதிகரித்து. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஜூன் 27
ஒரு சவரனுக்கு 560 ரூபாய் அதிரடியாக உயர்ந்து, சென்னையில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 370 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், கிலோ 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
ஜூன் 23 - ரூ.1,08,480
ஜூன் 24 - ரூ.1,06,800
ஜூன் 25 - ரூ.1,05,120
ஜூன் 26 - ரூ.1,06,400
ஜூன் 27 - ரூ.1,06,960 இன்று

Related Link
நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் காலமானார்

நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் காலமானார்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு

2
1 hr 7 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிரடியாக உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau