news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் காலமானார்
tv

Also Watch

நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் காலமானார்

திரையுலகினர் இரங்கல்

75

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நடிகரும், இயக்குநருமான கே.பாக்கியராஜ் காலமானார். உடல்நிலை கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது உயிரிழந்தார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

பாரதிராஜாவின் சிஷ்யர்

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் இருந்து, அவராலேயே நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்டு, இயக்குநரானவர் கே.பாக்யராஜ். திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுகிறவர். இதற்கு காரணம், அவரது தனித்துவமான கதை சொல்லும் முறை, சாதாரண விஷயத்தையும் சுவாரஸ்யமாக மாற்றும் திறமையும் தான். அவரது கதைகள் பெரும்பாலும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையைச் சுற்றியே எதார்த்தமானதாகவே இருக்கும்.


பாக்யராஜ் எனும் ஜாம்பவான்

முந்தானை முடிச்சு, இது நம்ம ஆளு, சின்னவீடு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பாக்யராஜ். பாக்யா என்ற இதழையும் நடத்தி வந்தவர். பார்த்திபன், பாண்டியராஜன், சுந்தர்.சி போன்றவர்கள் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்து, இன்று உச்சம் தொட்டுள்ளனர்.


எதார்த்தவாதி பாக்யராஜ்

தமது திரைப்படத்தில், மிகைப்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளோ, பிரம்மாண்டமோ இல்லாமல், பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கு நடக்கும் கதையைப் பார்ப்பது போன்ற உணர்வை பாக்யராஜ் தருவார். ஒரு கதையை எப்படி ஆரம்பித்து, எங்கே டுவிஸ்ட் வைக்க வேண்டும் அதை எப்படிச் சாமர்த்தியமாக அவிழ்க்க வேண்டும் என்பதில் பாக்யராஜ் கெட்டிக்காரர். இன்றுவரை பல இளம் இயக்குநர்களுக்குத் திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்கு பாக்யராஜின் படங்களே பாடப்புத்தகமாக இருக்கின்றன.

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 73. மகன் சாந்தனு நடிகராக உள்ளார். பாக்யராஜ் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

யமஹாவின் Blast அறிமுகம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved