news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
tv

Also Watch

tv

Read this

சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வானிலை மையம் கணிப்பு

5

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது. விருதுநகர், தென்காசி, நெல்லை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

வளி மண்டல காற்றழுத்த தாழ்வு பகுதி
இதுதொடர்பாக, வானிலை மையம் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது;
கடலோர ஆந்திரப் பிரதேசத்திலிருந்து மத்திய மகாராஷ்டிரா வரை தெலுங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மராத்வாடா பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல சுழற்சியின் வழியாக சுமார் 3.1 கிமீ முதல் 4.5 உயரத்தில் ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

ஜூன்-27 இன்று
தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை
திருவள்ளூர்
சென்னை
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
திருவண்ணாமலை
ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை

ஜூன்-28
விருதுநகர்
தென்காசி
திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதி
நீலகிரி
கோயம்புத்தூர்
திருப்பூர்
திண்டுக்கல்
தேனி
மதுரை
கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை


ஜூன்-29
கோயம்புத்தூர்
திருப்பூர் மாவட்ட மலைப்பகுதி
நீலகிரி
தேனி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்
கூடிய கனமழை

ஜூன்-30 முதல் ஜூலை-2ஆம் தேதி வரை
தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை

சென்னையில் கன மழை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மற்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்காக...
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

Related Link
வலுத்த எதிர்ப்பால் ரத்தான டெண்டர்

வலுத்த எதிர்ப்பால் ரத்தான டெண்டர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக அரசின் ஊழலை சாடிய பிரபலம், தொடரும் பதிவுகள்

9
54 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau