Also Watch
Read this
By: Fyrose Banu

தமிழகத்தில் உணவகம் மற்றும் தேநீர் கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு அனுப்பப்படும் 19 கிலோ உருளை சிலிண்டர் தட்டுப்பாடை போக்குவதற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் டைமன் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை கோரிக்கை
சென்னை பெரம்பூரில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை கட்டிடம் அமைந்துள்ள அலுவலக கட்டிடத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் டைமண்ட் ராஜா வெள்ளையன் செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய மாநில அரசுகளுக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் வலுவான கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் வரத்து குறைவு
அதனைத் தொடர்ந்து பேசிய அவர் ஈரான் அமெரிக்கா போரினால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் வரத்து குறைவின் காரணமாக தற்பொழுது இந்தியா முழுவதும் கேஸ் விநியோகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பாக இந்தியாவின் தமிழ்நாடு இன்னும் ஓரிரு நாட்களில் இந்த கேஸ் தட்டுப்பாட்டினால் ஒரு பெரும் விளைவை சந்திக்கும் என வரும் தகவல்கள் தெரிவிப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கேஸ் நிரப்பும் பணியானது தற்போது நிறுத்தி வைப்பு
மேலும் தற்போது வணிக நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல் மற்றும் டீக்கடை போன்ற சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர்களின் வரவானது தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது என அவர் குறிப்பிட்டார். இவற்றை நிரப்பும் கேஸ் பிளான்ட் எனப்படும் மையங்களிலேயே தற்பொழுது இந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கான கேஸ் நிரப்பும் பணியானது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்த தகவல் ஒன்று தெரிவிக்கின்றது என்று அவர் கூறினார்.
உணவகங்கள் பாதிக்கும் சூழல்
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் வணிக நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்படும் 19 கிலோ எடை கொண்ட கேஸ் உருளை சிலிண்டர் ஆனது தற்போது நிறுத்தி வைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் இதன் காரணமாக சிறு மற்றும் குறு தொழில் புரியும் உணவகங்கள் ஹோட்டல்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் தற்பொழுது தங்களது அன்றாட வியாபாரத்தினை தொடர முடியாமல் அவதிப்பட்டு வருவதாக தெரிய வருகிறது என அவர் குறிப்பிட்டார். 
பெரிதளவில் பாதிப்படும் பொதுமக்கள்
மேலும் இதனால் வணிக நிறுவனங்களில் முதலாளிகள் மட்டுமின்றி அதனால் பயனடையும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் ஹோட்டல் உணவாக உணவையே நம்பி அன்றாட வாழ்வினை நடத்திக் கொண்டிருக்கும் சாதாரண பாமர மக்களுக்கு உணவும் கிடைப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு இந்த நிலை மேலும் பூதாகரமாக பெரிய அளவில் மாறாமல் இருக்க உரிய நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கின்றது.
இரண்டு அரசாங்கமும் உறுதி செய்ய வேண்டும்
இது வெறும் வியாபார நோக்கிற்காக வைக்கப்படும் வேண்டுகோள் அல்ல ஒரு தனி மனித உணவிற்காக ஜகத்தினை அழிப்போம் என பாரதியாரின் சொல்லுக்கு இணங்க ஒரு தனி மனிதனுக்கு உணவு கிடைப்பதனை இந்த இரண்டு அரசாங்கமும் உறுதி செய்ய வேண்டும் என்பதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தீர்க்கமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
எனவே மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் தலையிட்டு இதற்கு ஒரு மாற்று ஏற்பாட்டினை செய்து தமிழக மக்கள் அன்றாடம் தங்களது பணியினை அன்றாடம் தொடர்வது போல் என்றும் தொடர வேண்டும் என்பதில் அக்கறை கொள்ள வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இந்த வணிக சிலிண்டர்களின் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உயர்ந்து வருவது தற்போது வேதனை அளித்து வருவதாகவும் கூறினார். மத்திய மாநில இரு அரசாங்களும் ஒன்றிணைந்து இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வினை காண வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved