ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த ஆரூர் கிராமத்தை சேர்ந்த அசோக் விவசாய வேலை செய்து வருகிறார் இவளது மகள்கள் யுவஸ்ரீ (13), பிரிங்கா (11), வெங்கடேசன் கூலி வேலை செய்து வருகிறார் இவரது மகள் பிரியா (13) ஆகிய 3 பேரும் இன்று மாலை பொன்னமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 6 மற்றும் 8 ம் வகுப்பு கல்வி பயின்று வருகின்றனர்.. இந்த நிலையில், அசோக் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பள்ளி விடுமுறை என்பதால் 3 பெண் குழந்தைகளும் விவசாய நிலத்தில் நாற்று நட்டு விட்டு அணிந்திருந்த துணியில் படிந்து இருந்த சேற்றினை கழுவ அருகில் இருந்த கிணற்றில் இறங்கியபோது தவறி விழுந்த ஒரு பெண்ணை காப்பாற்ற முயன்ற இரண்டு பெண் குழந்தைகளும் கிணற்றில் தவறி விழுந்து மூழ்கி உள்ளனர். இதில் நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீட்டுக்கு வராமல் இருந்ததால் நிலத்தில் அருகே தேடியபோது கிணற்றின் கரையில் துணி இருந்ததால் உடனடியாக ஊர் இளைஞர்கள் கிணற்றில் இறங்கி தேடியுள்ளனர் அதன் பின்பு உடனடியாக தீயணைப்பு துறைவிற்கு தகவல் தெரிவித்திருந்தேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர தேர்தலுக்கு பிறகு 3 குழந்தைகளின் உடலை சடலமாக மீட்டனர். மேலும் இது தொடர்பாக வாழைப்பந்தல் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Related Link கஞ்சா குடிப்பதில் நண்பர்களிடையே தகராறு