news-tamil-logo

3/22/2026, 12:05:00 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுபோதையில் பள்ளி மாணவிகளை கிண்டல் செய்த இளைஞர்கள்
tv

Also Watch

tv

Read this

மதுபோதையில் பள்ளி மாணவிகளை கிண்டல் செய்த இளைஞர்கள்

வாணியம்பாடி, திருப்பத்தூர்

Posted on: Feb 04, 2026 01:30 PM

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupathur

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி பகுதியை ஒட்டி தமிழக ஆந்திர எல்லையில் கள்ள சாராயம் மற்றும் கஞ்சா குடித்து விட்டு போதை தலைக்கேரிய நிலையில் ஊர் திரும்பும் இளைஞர்கள்.

அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவிகளிடம் தொடர்ந்து சீண்டலில் ஈடுபட்டு வருவதாகவும் இன்று 6 இளைஞர்கள் குடித்து விட்டு போதையில் தும்பேரி பகுதியில் பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவிகளிடம் சீண்டலில் ஈடுபட்டதை கண்ட அரப்பாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் கட்டிடத் தொழிலாளியான ராமமூர்த்தி போதையில் இருந்த இளைஞர்களிடம் சம்பவம் குறித்து
தட்டி கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் 6 பேர் கொண்ட கும்பல் இளைஞர் ராமமூர்த்தியை முகம் கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக தாக்கி விட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.

முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட படுகாயமடைந்த இளைஞர் ராமமூர்த்தியை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து அம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திர எல்லை பகுதியை ஒட்டியுள்ள தும்பேரி,அண்ணா நகர் பகுதியில் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று பள்ளி மாணவிகளிடம் போதை ஆசாமிகள் சில்மிஷம் செய்ததை தட்டிக் கேட்க குடும்பத்தாரை போதை ஆசாமிகள் சரமாரியாக தாக்கிய நிலையில்.

அப்பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருவதாகவும் தொடர்ந்து தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் கள்ளத்தனமாக நடைபெற்று வரும் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபடும் போதை ஆசாமிகள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவல்துறையினர் பகுதியில் தொடர்ந்து நோண்டு பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Link
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
5 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved