news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home health வெள்ளை நிற முட்டை - பழுப்பு நிற முட்டை ஆகிய இரு நிற முட்டைகளில் எது சிறந்தது?
tv

Also Watch

tv

Read this

வெள்ளை நிற முட்டை - பழுப்பு நிற முட்டை ஆகிய இரு நிற முட்டைகளில் எது சிறந்தது?

முட்டைகளில் எது சிறந்தது

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
White and brown egg

பழுப்பு நிற முட்டையே இயற்கையானது என்றும் அதுலதான் அதிக ஊட்டச்சத்து இருக்கு என்றும் பலரும் நம்புராங்க. இதை அதிக ஆரோக்கியம் தரக்கூடியதாகவும் பார்க்கின்றனர்.

ஆனால் இது உண்மையா?முட்டையின் நிறம் எதை சார்ந்தது?.ஆனால் இந்த நிற வேறுபாடு ஏன்? இதனால் ஊட்டச்சத்தில் மாறுபாடு உள்ளதா?

என பல கேள்விகள் இருக்கு முட்டை ஓட்டின் நிறம் கோழியின் இனத்தை பொறுத்தே மாறுபடுவதாக சொல்ராங்க வல்லுநர்கள்.


"பொதுவாக வெள்ளை நிற இறகுகள் மற்றும் காதுகள் கொண்ட கோழி வெள்ளை நிறத்தில் முட்டையிடும். அதே சமயம் சிவப்பு நிற இறகுகள் மற்றும் காதுகள் கொண்ட கோழி பழுப்பு நிற முட்டையிடும்" என்று (Food and Wine) என்ற அமெரிக்க இதழ் செய்தி வெளியிட்ருக்கு.

மேலும் "கோழி எந்த இனத்தை சேர்ந்தது என்பதைப் பொறுத்துதான் முட்டை ஓடுகளின் நிறம் தீர்மானிக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க மரபியல் சார்ந்ததுனு சொல்றாங்க மருத்துவர்கள்.
"பெரும்பாலான முட்டைகளின் அடிப்படை நிறம் வெள்ளையாகதான் இருக்கும்.

ஆனால் கோழி அதை ஈனும்போது, ஒரு சில இனங்கள் அதன் மீது நிறமியை அடுக்குவதாகவும்,.இது முட்டை ஓட்டின் நிறத்தை மாற்றுவதாக சொல்ராங்க கோழி வளர்ப்பு ஆராய்ச்சியாளர் டாக்டர் ரிச்சர்ட் பிளாட்ச்ஃபோர்ட்.

அதாவது முட்டையின் வெளிப்புற நிறத்தை கோழியின் மரபணு பண்புகளே தீர்மானிக்கிறது. இது தவிர மேலும் சில கோழிகள் நீல மற்றும் பச்சை நிறங்களிலும் முட்டையிடுகின்றன. இதற்கும் அவற்றின் மரபணு அமைப்பே காரணம் என்று சொல்ராங்க...

பழுப்பு நிற முட்டைகள் அதிக ஊட்டச்சத்து கொண்டதா?

என்ற கேள்விக்கு வெள்ளை மற்றும் பழுப்பு நிற முட்டைகளுக்கு இடையே ஊட்டச்சத்து அளவில் எந்த குறிப்பிடத்தக்க வித்தியாசமும் இல்லை என்கிறது அமெரிக்க வேளாண்துறை..

இரண்டு நிற முட்டைகளிலும் ஒரே அளவிலான புரதச் சத்து, வைட்டமின் (A, D, B12) மற்றும் மினரல்ஸ்தான் இருக்கு. இருந்தாலும் கூண்டிற்குள் அடைத்து வளர்க்காமல் சுதந்திரமாக சுற்றித் திரியும் கோழிகள் இடும் முட்டைகள்ல அதிக அளவு வைட்டமின் D மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருக்கலாம் என 'மெடிக்கல் நியூஸ் டுடே' வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டையின் நிறத்தை விட அதன் அளவைப் பொறுத்துதான் ஊட்டச்சத்து வேறுபடுவதாக சொல்லுது அமெரிக்க வேளாண்துறை.

பெரிய முட்டையில் 90 கலோரி மற்றும் 8 கிராம் புரதம் உள்ளது, அதேசமயம் சிறிய முட்டையில் 60 கலோரி மற்றும் 6 கிராம் புரதம் மட்டுமே உள்ளதாக அது குறிப்பிடுகிறது.

"சுதந்திரமாக சுற்றித் திரியும் கோழிகள் மீது அதிக சூரிய ஒளி படுவதால், இவை ஈனும் முட்டைகளில் வைட்டமின் D அதிகம் இருக்கும்" என அமெரிக்க நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பழுப்பு நிற முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்படுவது ஏன்?

இரண்டு முட்டைகளிலும் ஒரே அளவிலான ஊட்டச்சத்துகளே இருக்கிறது என்றால், ஏன் பழுப்பு நிற முட்டை வெள்ளை நிற முட்டையை விட விலை அதிகமாக உள்ளது?இதற்கு உணவியல் நிபுணர் அனு அகர்வால் 2 காரணங்களை முன்வைக்கிறார்.

"வெள்ளை நிற முட்டைகளை விட பழுப்பு நிற முட்டைகள் கடைகளில் அதிகம் கிடைக்காதது முதல் காரணம். பழுப்பு நிற முட்டைகளை ஈனும் கோழிகள் பெரிதாக இருப்பதால் அதற்கு நிறைய உணவுகள் தேவைப்படும். அதாவது இதன் உற்பத்தி செலவு காரணமாக விலையும் அதிகமாக உள்ளது" என்கிறார் மேலும்,பழுப்பு நிற முட்டையிடும் கோழிகள் அதிக உணவுகள் உண்பதால் இதன் விலைகள் அதிகமாக இருப்பதாக அமெரிக்க வேளாண்துறையும் ஒப்புக்கொள்கிறது.

'ஊட்டச்சத்தை போலவே சுவையிலும் இரு முட்டைகளுக்கு இடையே எந்த வேறுபாடும் கிடையாது. அதற்காக எல்லா முட்டைகளுமே ஒரே மாதிரியான சுவை கொண்டவை என்றும் பொருள்கிடையாது' என அமெரிக்க ஊடகமான ஹெல்த்லைனில் செய்தி வெளியாகிருக்கு.

"முட்டையின் சுவை, கோழியின் இனம், அது என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்கிறது, முட்டை எந்தளவுக்கு புதியது, சமைக்கும் முறை ஆகியவற்றை பொறுத்தே மா றுபடுது.மேலும் வீட்டில் வளர்க்கப்படும் கோழி மற்றும் வழக்கமாக வளர்க்கப்படும் கோழிகள் சாப்பிடும் உணவுகளில் வித்தியாசம் இருப்பதால், இதுவும் முட்டையின் சுவையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்" எனக் கூறுகிறது அந்த செய்தி.

பழுப்பு நிற முட்டைகள் ஆரோக்கியமானதாகவும், இயற்கையானதாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் இது உண்மையல்ல. அனைத்து முட்டைகளும் ஆரோக்கியமானவைதான். இரண்டு நிற முட்டைகளிலும் நிறம் இயற்கையானவை தான். அதேசமயம் பழுப்பு நிற முட்டைகள் அனைத்துமே இயற்கையானது என நினைப்பது தவறு" என சொல்றாங்க.

மொத்தத்தில் முட்டையின் நிறத்தில் கவனம் செலுத்துவதை விட, மக்கள் அதன் தரம் மற்றும் அது எந்தளவிற்கு புதியது என்பதைக் கருத்தில்கொண்டு வாங்க வேண்டுமென அறிவுறுத்தப்படுது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம்!

1
1 hr 10 mins agoshare
Gold rate








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved