உத்தரபிரதேசம்... மனைவியையும், மகள்களையும் துப்பாக்கியால் சுட்டு கொன்ற கொடூரன். மூன்று சடலங்களையும் வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைத்த பயங்கரம். யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக நீலிக்கண்ணீர் வடித்து ஆக்டிங். நடுராத்திரியில் அரங்கேறிய திகில் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? கொலைக்கான பின்னணி என்ன?உத்தரபிரதேச மாநிலம், ஷாம்லிய சேர்ந்த பாரூக்-தாஹிரா தம்பதிக்கு 16 வயசுல அஃப்ரீன், 14 வயசுல சஹ்ரீன்-ங்குற ரெண்டு மகள்கள் இருந்தாங்க. இஸ்லாம் வழிமுறைகள தீவிரமா கடைபிடிச்சிட்டு வர பாரூக், மனைவி தாஹிராவுக்கு பயங்கர கண்டிஷன் போட்டுருக்காரு. தாஹிரா வீட்டுக்குள்ள இருந்தாலும் பர்தா போட்டுட்டே இருக்கனும்னும், முகத்த மறைச்சு வச்சே இருக்கனும்னு இப்படி ஏகப்பட்ட கண்டிஷன் போட்டுருக்காரு. இதுமட்டுமில்லாம, மனைவியையும், மகள்களையும் வீட்டுக்குள்ள இருந்து வெளியே வரவிடாம வீட்டுக்குள்ளேயே அடைச்சு வச்சிருக்காரு. அதனால, கணவன் - மனைவி இடையில அடிக்கடி தகராறு வந்துருக்குது. பாரூக் வீட்டுல இல்லாத நேரத்துல மட்டும்தான், தாஹிராவுக்கும், ரெண்டு மகள்களும் கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க.பாரூக் இப்ப மாறிடுவாரு, அப்ப மாறிடுவாருன்னு மனைவி தாஹிரா நினைச்சிட்டு இருந்துருக்காங்க. ஆனா, நாளாக நாளாக பாரூக்கோட அடாவடித்தனம் எல்லை மீறி போயிருக்குது. இதுக்கு இடையில, ஒருநாள் தாஹிராவும், ரெண்டு மகள்களும் பர்தா போடாமலே, பக்கத்துல உள்ள கடைக்கு போயிட்டு வந்துருக்காங்க. அத நேர்ல பாத்த பாரூக், அன்னைக்கு நைட்டு அவங்க மூணு பேரையும் சரமாரியா அடிச்சு காயப்படுத்திருக்காரு. வெளியே போகக்கூடாது, பர்தா போட்டுட்டே இருக்கனும்னு சொல்றேன், என்ன மீறி எப்படி வெளியே போவீங்கன்னு கேட்டு கேட்டு சித்ரவதை பண்ணிருக்காரு. நம்ம எவ்வளவு சொல்லியும் நம்ம பேச்ச மனைவி தாஹிரா கேக்க மாட்டிக்கிறாளேன்னு ஆத்திரமடைஞ்சிருக்காரு பாரூக். அந்த ஆத்திரம்தான் கொலை பண்ணவே தூண்டிருக்குது. சம்பவத்தனைக்கு நைட்டு, மனைவி தாஹிராவும், மகள்கள் அஃப்ரீன், சஹ்ரீனும் தூங்கிட்டு இருந்துருக்காங்க. அப்போ, பாரூக், தாஹிராவ எழுப்பி டீ போட்டு கொடுக்க சொல்லி கேட்டுருக்காரு. அவங்களும் எழுந்து டீ போட்டு கொடுக்குறதுக்காக கிச்சன்குள்ள போனாங்க.அப்ப பின்னாடியே போன பாரூக், தான் மறைச்சு வச்சிருந்த துப்பாக்கிய எடுத்து, தாஹிராவோட மார்பு பகுதியிலேயே சுட்டுருக்காரு. அந்த துப்பாக்கி சத்தம் கேட்டு மகள்கள் ரெண்டு பேரும் அலறியடிச்சிட்டு எழுந்து பாத்துருக்காங்க அப்போ, தாய் ரத்த வெள்ளத்துல கெடந்தத பாத்து துடிதுடிச்சிருக்காங்க. அப்ப, மகள்களையும் துப்பாக்கியால சுட்டு பொசுக்கிருக்காரு பாரூக். அடுத்து, ஏற்கனவே வீட்டுக்குள்ள கழிவறைக்காக தோண்டி வச்சிருந்த குழியில மூணு சடலத்தையும் போட்டு புதைச்சிட்டு, மனைவியும், மகள்களும் காணாம போய்ட்டதா உறவினர்கள்கிட்ட சொல்லி நாடகமாடிருக்கான் பாரூக். போலீசார் விசாரணையில மொத்த உண்மையும் தெரியவரவே, பாரூக் மேல கொலை வழக்குபதிவு பண்ண காவலர்கள் அவன அரெஸ்ட் பண்ணி தொடர்ந்து விசாரிச்சிட்டு இருக்காங்க. அதே நேரம், வீட்டுக்குள்ளேயே புதைக்கப்பட்ட மனைவி, மகள்கள் சடலங்கள மீட்டு போஸ்ட் மார்டதுக்கு அனுப்பி வைக்கிற வேலையில இறங்கிருக்காங்க காவல்துறையினர்.