Also Watch
Read this
By: Web Team

இந்திய தூதரக அதிகாரிகள் தங்களை சந்தித்து தாயகம் அழைத்து வர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். கடந்த நவம்பர் 3 ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 31 பேரை, இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் கடந்த 17-ம் தேதி விடுதலை செய்தது. 2 வாரங்களாகியும் இலங்கை தூதரகத்தில் தவித்து வருவதாகவும், இந்திய தூதரக அதிகாரிகள் ஏறெடுத்து பார்க்கவில்லை எனவும் தமிழக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved