சட்டவிரோத நிலக்கரி சுரங்கம், நிலக்கரி போக்குவரத்து மற்றும் சேமிப்பு தொடர்பான வழக்கில் மேற்கு வங்க மாநிலத்தின் துர்காபூர், புருலியா, ஹவுரா மற்றும் கொல்கத்தா மாவட்டங்களில் 24 இடங்களில் தீவிர சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கப்பணத்தையும், தங்க நகைகளையும் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதே போன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலும் நிலக்கரி முறைகேடு தொடர்பாக அனில் கோயல், சஞ்சய் உத்யோக், LB சிங் மற்றும் அமர் மண்டல் ஆகிய தொழிலதிபர்களுக்கு சொந்தமான 18 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கட்டுக் கட்டாக ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.