Also Watch
Read this
By: Manigandan Raja

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்துக்கு நடுவே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டத்துக்கு நடுவே சந்திப்பு

போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நெருங்கிய சமயத்தில், இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும், ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியே, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்டனர்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் - தொடரும் போராட்டம்

நீட் வினாத்தாள் கசிவு புகாரால் பதவி விலகல் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மறுத்தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடம் பிடித்த மாணவனை அழைத்து பாராட்டியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
பிரதானை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிர போராட்டம் மேற்கொண்டு உடல்நல பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இந்த சூழலில், அமைச்சரின் எக்ஸ் பதிவு குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved