ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் வெடித்து சிதறி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜம்மு&காஷ்மீர் அரசாங்கம் இழப்பீடு அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா 1 லட்ச ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.