Also Watch
Read this
By: Manigandan Raja

முதியோர் இலவச பேருந்து பயண திட்டம் அறிமுகம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். பிரதமரின் இ-பஸ் சேவா திட்டத்தின் கீழ் பெண்களுக்காக 10 பிங்க் இ-பஸ்கள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக எம்.எல்.ஏ இல்லத்தில் வெடித்த வெடிகுண்டு
மணிப்பூரில் கொந்தோஜாம் தொகுதி எம்.எல்.ஏவும், மாநில அரசின் செய்தித் தொடர்பாளருமான சபம் ரஞ்சன் சிங்கின் வீட்டில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை தூண்டியுள்ளது.

முன்கூட்டியே எந்த மிரட்டலும் வரவில்லை என்றும், யாருடனும் தனக்கு பகை இல்லை என்றும் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார். இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என முதலமைச்சர் கேம்சந்த் சிங் கண்டித்துள்ளார்.
ஐ.ஐ.டி. மாணவர் ரிஷிகேஷ் குமார் உயிரிழந்த விவகாரம்
டெல்லி ஐ.ஐ.டி. மாணவர் ரிஷிகேஷ் குமார் உயிரிழந்த விவகாரத்தில் போராட்டம் தீவிரமடைந்ததால், மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ஐ.டி. இயக்குநர் ரங்கன் பானர்ஜி எச்சரித்துள்ளார்.

வியாழக்கிழமை இரவு, போராட்டக்காரர்கள் பேராசிரியர்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று, அவமதிக்கும் மற்றும் மிரட்டும் வகையிலான முழக்கங்களை எழுப்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved