Also Watch
Read this
Posted on: Oct 31, 2024 11:50 AM
By: Srini Vasan

இன்று இறக்கத்துடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகத்தை முடித்துக் கொண்டன. மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் பூஜ்யம் புள்ளி 70 சதவிகிதம் சரிவை சந்தித்து 79 ஆயிரத்து 386 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்துக் கொண்டது.
நிப்டியும் பூஜ்யம் புள்ளி 56 சதவிகித வீழ்ச்சியை சந்தித்து 24 ஆயிரத்து 205 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்த து.
சிப்லா, L&T, ONGC ஆகியவற்றின் பங்குகள் விலை உயர்ந்த போது, டெக் மஹிந்திரா, HCL, TCS உள்ளிட்டவற்றின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து வாபஸ் பெறப்படுவதாலும், பல நிறுவனங்களின் காலாண்டு லாபம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாலும், இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து இறக்கத்தில் உள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved