Also Watch
Read this
By: Manigandan Raja

கேரள முதல்வர் சதீசன் செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல்
முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக கேரள முதல்வர் சதீசன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் விவகாரத்தில் தொடர்ந்து பிரச்னை நீடித்து வருவதாக தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானை காக்க வைத்தோம்"
ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது, போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானை இந்தியா பல மணி நேரம் காக்க வைத்ததாக, முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி அனில் சவுஹான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 10-ம் தேதி காலை 9.30 மணிக்கு பாகிஸ்தான் போன் செய்ததாகவும், மதியம் வரை தாக்குதல் நடத்திய பிறகே போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டதாகவும் கூறினார்.
"2027 - 28 நிதியாண்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு அறிமுகம்"
2027 - 28-ம் நிதியாண்டில் இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகமாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

எனினும், இதற்கு பிறகும் காகித ரூபாய் நோட்டுக்களை கைவிடும் திட்டம் இல்லை எனவும், வழக்கம் போல அவை புழக்கத்தில் தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved