Also Watch
Read this
By: Manigandan Raja

தொலைபேசியில் மக்களிடம் மரியாதையின்றி பேச வேண்டாம்
மாநிலங்களவையில் புதிதாக பொறுப்பு ஏற்ற தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். தொலைபேசியில் மக்களிடம் மரியாதையின்றிப் பேச வேண்டாம் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். தொடர்ந்து அனைத்து எம்.பிக்களுடன் பிரதமர் மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதுவும் இல்லை
மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் தொடர்பாக சிறப்பு கூட்டத்தொடர் எதுவும் கூட்டப்படாது என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இந்த மசோதாக்கள் தொடர்பாக விவாதிப்பதற்காக ஆகஸ்ட் 16 முதல் 18-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சிறப்பு கூட்டத் தொடர் கூட்டப்படும் என வதந்திகள் பரவி வந்தன.
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் விவகாரம்
நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க மறுப்பதற்கு மாநில அரசுகள் நிதிச் சுமையை காரணமாக காட்டுவதை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கில், மாவட்ட நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ள மாநிலங்கள், அதுகுறித்து சுதந்திரமாக மறுபரிசீலனை செய்து 2 வாரங்களில் புதிதாக முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved