Also Watch
Read this
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே விவசாயிகளுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளதாக உதயநிதி விமர்சித்துள்ளார். வேளாண் நிதி நிலை அறிக்கையில் திட்டங்களுக்கு பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாக சாடி உள்ளார்.
பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது
இதுதொடர்பாக, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது;
தவெக அரசு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தது என்று சொல்வதை விட, முழுக்க முழுக்க முதல்வருக்கு ஜால்ரா அடித்து புகழுரை செய்து, அதாவது மரபுக்கு மீறிய செயல்களை வேளாண்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் செய்து உள்ளார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை எல்லாம் புது திட்டம் போல் பெயர் மாற்றி, ஒரு வார்த்தையை மட்டும் சேர்த்து அறிவித்து உள்ளனர்.
உருப்படியாக ஒன்றும் இல்லை

விவசாயிகளுக்காக கருப்புச்சட்டை
மேகதாது அணை விவகாரம், பயிர்க் கடன் தள்ளுபடியில் ஏற்பட்ட ஏமாற்றம், குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் எதிர்கொள்ளும் வேதனை ஆகியவற்றை முன்னிறுத்தி, தவெக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் வகையிலும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் கருப்புச் சட்டை அணிந்து வந்து உள்ளோம்.
முதல்வர் பதில் சொல்லட்டும்
காவிரி விவகாரம் குறித்துப் பேச ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர சபாநாயகரிடம் கடிதம் வழங்கி உள்ளோம். அப்போது விவசாயிகள் பிரச்சினை குறித்த கேள்விகள் கேட்போம். முடிந்தால், தைரியம் இருந்தால் முதல்வர் விஜய் அவையில் வாயை திறந்து பதில் சொல்லட்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved