Also Watch
Read this
பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர்கள் இருவருக்கும் முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவித்து உள்ளார். மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொலை நோக்கு பார்வையுடன் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளார்.

வாழ்த்து, பாராட்டு
இதுதொடர்பாக, முதல்வர் விஜய் கூறி இருப்பதாவது;
தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சனுக்கும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத்துக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

அனைத்து தரப்பு மக்கள் முன்னேற்றம்
தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திருத்திய நிதிநிலை அறிக்கையானது மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்து உள்ளது.
வெற்றிப்பயணம் தொடரட்டும்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved