news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மத்திய அமைச்சர்கள் மீது சோனம் வாங்சுக் குற்றச்சாட்டு
tv

Also Watch

மத்திய அமைச்சர்கள் மீது சோனம் வாங்சுக் குற்றச்சாட்டு

புகைப்படங்களை வெளியிடக் கூடாது

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மீது சோனம் வாங்சுக்

உண்ணாவிரதத்தை முடித்த போட்டோவை வெளியிட்ட விவகாரம் :

26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த புகைப்படங்களை மத்திய அமைச்சர்கள் வெளியிட்டதன் மூலம், தனக்கு அளித்த வாக்குறுதியை அரசு மீறிவிட்டதாகச் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் உடல்நிலை மோசமடைந்ததால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டவரை மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் சந்தித்து சூப் குடித்து அவர் உண்ணாவிரதத்தை நிறைவு செய்ய வைத்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் மாணவர் பிரதிநிதிகளை உள்ளடக்கி, இதனை ஒரு கூட்டு முயற்சியாக அறிவிக்கும் வரை புகைப்படங்களை வெளியிடக் கூடாது என்று சோனம் வாங்சுக் அமைச்சரிகளிடம் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், அவர்கள் அந்த வாக்குறுதியை மீறிப் புகைப்படங்களை வெளியிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

E20 எரிபொருள் அறிமுகம் - மத்திய அரசை சாடிய காங்கிரஸ்

"மத்திய அரசின் E20 எரிபொருள் திட்டத்தின் பின்னணியில் சுற்றுச்சூழல் சார்ந்த நோக்கம் ஏதுமில்லை" என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.பிற நாடுகள் பெரும்பாலும் விவசாயக் கழிவுகள் மற்றும் பிற கழிவு உயிரிப் பொருட்களிலிருந்து ((biomass)) எத்தனாலை உற்பத்தி செய்யும் நிலையில், இந்தியாவில் கரும்பு, அரிசி மற்றும் சோளம் மூலம் எத்தனால் உற்பத்தி செய்யப்படுவதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

எனவே, E20 எரிபொருள் திட்டத்தின் மூலம் இந்தியாவின் நீர் வளங்களுக்கும் உணவுப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்

கண்ணூரில் 7,000 லிட்டர் எரி சாராயம் பறிமுதல்

கேரளாவில் சாக்கு மூட்டைகளுக்கு அடியில் மறைத்து கடத்தப்பட்ட 7,000 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கண்ணூர் மாவட்டம் பையன்னூரில் அதிகாலை கலால் துறை அதிகாரிகளால் சோதனை நடத்தியபோது.

கர்நாடகப் பதிவு எண் கொண்ட லாரியில், தவிடு மூட்டைகளுக்கு அடியில், 7 ஆயிரம் லிட்டர் எரி சாராயம் இருப்பது கண்டறியப்பட்டு அவை ((rectified spirit)) பறிமுதல் செய்யப்பட்டது. மங்களூருவில் இருந்து எர்ணாகுளத்திற்கு கொண்டு வந்ததாக லாரி ஓட்டுநர் கூறிய நிலையில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தும் விவகாரம்

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தும் விவகாரம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதா?

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved