டெல்லியில் திருமண நாளன்று பெற்றோரை கொலை செய்துவிட்டு பொய்யான புகார் அளித்து நாடகமாடிய மகனை போலீஸார் கைது செய்தனர். டெல்லி நேப் சராய் பகுதியில் உள்ள தியோலி கிராமத்தை சேர்ந்த அர்ஜூன், தனது தந்தை, தாய் மற்றும் சகோதரியை கொலை செய்து விட்டு, யாரோ கொலை செய்து விட்டதாக போலீஸுக்கு தகவல் அளித்தார்