news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வந்தே மாதரம் பாடலை நிறுத்த சொன்ன சோனியா?
tv

Also Watch

வந்தே மாதரம் பாடலை நிறுத்த சொன்ன சோனியா?

பாஜகவின் குற்றச்சாட்டு

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சோனியா சைகை

பாஜகவினர் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் விளக்கம் 

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சுதந்திர நாள் விழாவில் வந்தே மாதரம் பாடலை சோனியா காந்தி நிறுத்தச் சொன்னதாக பாஜகவின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடலின்போது, சோனியா காந்தி ஆட்சேபனைக்குரிய வகையில் செய்கை செய்ததாக விடியோ வைரலானது.

வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திக்குப்பின் உள்ள பத்திகள் பாடப்படுவதை சோனியா காந்தி நிறுத்த முயன்றதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டி விமர்சித்தனர். பாஜகவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள காங்கிரஸ், கார்கே நீண்டநேரம் நின்று கொண்டிருந்ததால் அவருக்காக நாற்காலியை கொண்டு வருமாறு சோனியா சைகையில் கூறியதாக விளக்கம் அளித்துள்ளது.

வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பவர்கள்

வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பவர்கள், தங்களது தாய் யார் என்பதையே அறியாதவர்கள் என கேரள பல்கலைக்கழக துணைவேந்தர் மோகனன் குன்னும்மல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். இளைஞர் சந்திப்பில் பேசிய அவர், இந்தியாவை தாயாக கருதுவதால்தான் வந்தே மாதரம் என்கிறோம் என தெரிவித்தார்.

கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ்-இன் செயல்திட்டத்தை முன்னெடுக்க துணைவேந்தர் முயற்சிப்பதாக, அவரின் பேச்சுக்கு எஸ்.எஃப்.ஐ மற்றும் கே.எஸ்.யூ உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

KFC-யில் கெட்டுப்போன சிக்கன் வழங்கப்பட்டதாக புகார் 

கர்நாடக மாநிலம் மங்களூரு K.S. Rao Road-ல் உள்ள KFC-யில் கெட்டுப்போன சிக்கன் வழங்கப்பட்டதாக வாடிக்கையாளர் புகார் அளித்ததை தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

சமையலறை, ஸ்டோர் ரூம் மற்றும் குளிர்சாதன சேமிப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், குடோனை சீல் வைத்து, உணவு மாதிரிகள் சேகரித்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பினர்.

Related Link
சுதந்திர தின விழாவை புறக்கணித்த ராகுல், மல்லிகார்ஜுன கார்கே

சுதந்திர தின விழாவை புறக்கணித்த ராகுல், மல்லிகார்ஜுன கார்கே

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசுப் பள்ளிகளை சீரமைப்போம் எனும் புதிய இயக்கம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved