வரும் 22ஆம் தேதி அன்று, தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 2 நாட்களில் வலுவடைய வாய்ப்பு. அதற்கடுத்த 2 நாட்களில் மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிப்பு.மயிலாடுதுறை, நாகை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 6 நாட்கள் கனமழை பெய்யக் கூடும் எனவும் எச்சரிக்கை. வடகிழக்கு பருவமழை காலத்தில், தற்போது வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 281 மில்லி மீட்டர் மழை பொழிவு. இயல்பான மழை அளவு 298 மில்லி மீட்டர் என்ற நிலையில், இயல்பைக் காட்டிலும் 6 சதவீதம் குறைவாகப் பதிவு என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.