தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. மார்ச் 11 முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில், மாநில பாடத் திட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வு, இன்று மாா்ச் 11 முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த பொது தோ்வை பள்ளி மாணவா்கள் 8,82,806 போ், தனித் தோ்வா்கள் 25,801 போ், சிறைவாசிகள் 395 என மொத்தம் 9,09,002 போ் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் 12,292 மாற்றுத் திறனாளி தோ்வா்களுக்கு சொல்வதை எழுதுபவா் ஸ்கிரைப் என்ற சலுகை வழங்கப்பட்டு உள்ளது. தோ்வுப் பணியில் 45,000க்கும் மேற்பட்ட ஆசிரியா்களும், தோ்வு முறைகேடுகளைத் தடுக்க சுமாா் 4,800க்கும் மேற்பட்ட பறக்கும் படையினரும் ஈடுபட்டுள்ளனர். பொது தேர்வு விதிமுறைகள் தோ்வு மையங்களில் பணிபுரியும் ஆசிரியா்கள், பணியாளா்களின் செல்போன்களை வினாத்தாள் வைக்கும் அறையிலேயே வைத்து பூட்டி சீல் வைக்க வேண்டும். இதற்கென தனி அலமாரி பயன்படுத்தக் கூடாது. இந்த நடைமுறை இந்த ஆண்டு முதல் அமலானது. பொதுத் தோ்வு தொடா்பாக மாணவா்கள், தோ்வா்கள், பொது மக்கள் தோ்வுகள் தொடா்பான புகாா்கள், கருத்து, சந்தேகங்கள் குறித்து அனைத்து தோ்வு நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 94983 8307594983 83076 ஆகிய செல்போன் எண்களில் தெரிவித்து பயன்பெற கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.சந்தேகங்களை தெரிந்து கொள்ள வசதி பொதுத் தோ்வு வினாத்தாள் தொடா்பாக தோ்வு நாள்களில் அன்றைய தோ்வுக்குரிய வினாத்தாள் குறித்த புகாா், கருத்து, சந்தேகங்களை மாணவா்கள் மற்றும் தோ்வா்கள் rdsequestionpaperqueries@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கு முதல் தோ்வாக தமிழ் மொழி பாட தோ்வு, இன்று 11ஆம் தேதி நடக்கிறது. Related Link சிலிண்டர் தட்டுப்பாடு, "யாரும் அச்சப்பட வேண்டாம்"