Also Watch
Read this
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். மேற்காசியப் போர் காரணமாக கச்சா எண்ணெய், எல்பிஜி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து நாளை ஆலோசிக்கப்பட உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில முதலமைச்சர்கள் நாளைய ஆலோசனையில் பங்கேற்க மாட்டார்கள். 5 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுடன் தனியே ஆலோசனை நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

பேரால் பதற்றம்
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் உலக நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டு உள்ளது. ஈரான் வசமுள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாக கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்று ஈரான் கூறி உள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு விவகாரம்
இந்நிலையில், மேற்காசியப் போர் நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக, நாளை மார்ச் 27ஆம் தேதி பிற்பகல் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மாநிலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்கள் மற்றும் தலைமைச் செயலர்களுடன் மோடி ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

5 மாநிலங்களுக்கு தனி கூட்டம்
தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

இந்த 5 மாநிலங்களும் காணொலி கூட்டத்தில் பங்கேற்காது என்றும் அந்த மாநில தலைமைச் செயலாளர்களுடன் தனியே ஒரு கூட்டம் நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved