news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 9 ஆளுநர்கள் அதிரடி மாற்றம் - ஜனாதிபதி உத்தரவு
tv

Also Watch

tv

Read this

9 ஆளுநர்கள் அதிரடி மாற்றம் - ஜனாதிபதி உத்தரவு

ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றம்

42

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ள தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்பட 9 மாநில ஆளுநர்கள் இடம் மாற்றப்பட்டனர். மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த போஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டார். கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிக்க உள்ளார். இதே போல், தெலங்கானா, பீகார், மகாராஷ்டிரா, இமாச்சலபிரதேசம், நாகாலாந்து மாநில ஆளுநர்களும், டெல்லி, லடாக் ஆகிய யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர்களும் இடம் மாற்றப்பட்டனர்.

ஜனாதிபதி மாளிகை அறிக்கை
இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது;
மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போசின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமிக்கப்படுகிறார். கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் Rajendra Arlekar தமிழக ஆளுநருக்கான பணிகளை கூடுதலாக கவனிப்பார்.

* ஹிமாச்சல பிரதேச ஆளுநர் ஸ்ரீ சிவ பிரதாப் சுக்லா, தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* தெலுங்கானா ஆளுநர் ஸ்ரீ ஜிஷ்ணு தேவ் வர்மா, மஹாராஷ்டிராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து ஆளுனராக ஸ்ரீ நந்த் கிஷோர் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* பீகார் மாநில ஆளுநராக, ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்னைன் நியமிக்கப்பட்டுள்ளார்.

* லடாக்கின் துணைநிலை ஆளுநர் ஸ்ரீ கவிந்தர் குப்தா, ஹிமாச்சல பிரதேச ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* டில்லி ஆளுநர் ஸ்ரீ வினய் குமார் சக்சேனா, லடாக்கின் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

* டில்லியின் துணைநிலை ஆளுநராக ஸ்ரீ தரஞ்சித் சிங் சாந்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்கள் அனைத்தும், அந்தந்த அலுவலகங்களுக்கு அவர்கள் பொறுப்பேற்கும் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.
இவ்வாறு குடியரசுத்தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Link
முதலமைச்சரின் அறிவிப்புகள் என்னவாக இருக்கும்?

முதலமைச்சரின் அறிவிப்புகள் என்னவாக இருக்கும்?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மத்திய அரசு, இபிஎஸ்-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்

0
2 mins agoshare
தஞ்சாவூரில் முதல்வர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved