சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே தனி நபர் ஒருவர் சாலையின் குறுக்கே வேலி அமைத்ததால் பள்ளி மாணவர்கள் 2 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலையில், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. சொனப்பாடி கிராமத்தில் வசித்து வரும் பாலு என்ற சின்னான் என்பவருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாலு சாலையின் குறுக்கே வேலி அமைத்த நிலையில், அந்த இடம் அவருக்கு சொந்தமானது என சொல்லப்படுகிறது.