சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை ஒன்றே கால் லட்சம் ரூபாயை நெருங்கியதால், சாமானிய மக்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரே நாளில் மட்டும், ஒரு சவரனுக்கு 5 ஆயிரத்து 200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 24 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரே நாளில் 2 முறை விலை உயர்வுசென்னையில், இன்று 28ஆம் தேதி, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்தது. மொத்தமாக ரூ.5,200 அதிகரித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, தங்கத்தின் மீதான சர்வதேச முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் உலகம் முழுவதும் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2026 தொடக்கம் முதலே உச்சம்சென்னையில் தங்கத்தின் விலை இந்தாண்டு தொடக்கம் முதலே தொடர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை, உலக நாடுகள் தங்கத்தை அதிக அளவில் சேமித்து, பதுக்கி வைப்பது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.நேற்றைய விலை நிலவரம்நேற்று 27ஆம் தேதி, காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.14,960க்கும், ஒரு சவரனுக்கு ரூ.520 குறைந்து 1,19,680 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இதனிடையே, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஜனவரி 28ஆம் தேதி, காலை நிலவரப்படி, ஒரு கிராமுக்கு ரூ.370 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,330க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,22,640க்கும் விற்பனை ஆனது. மீண்டும் அதிகரித்து, அதிர்ச்சிஇந்நிலையில், இன்று பிற்பகல் வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பாக தங்கத்தின் விலை மீண்டும் ஒரு கிராமுக்கு ரூ. 280 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,610 ஆக இருந்தது. ஒரு சவரனுக்கு ரூ.2,240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,24,880க்கும் விற்பனை ஆனது. சுமாராக ஒன்றே கால் லட்சம் ரூபாயை நெருங்கி உள்ளது. வெள்ளி விலை நிலவரம்வெள்ளியின் விலை இன்று காலை ஒரு கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.400க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.13,000 உயர்ந்து ரூ.4,00,000க்கும் விற்பனை ஆனது. Related Link குடியரசுத்தலைவர் உரை - எம்.பி.க்கள் அமளி