ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று காலை வரலாறு காணாத அளவு ஏற்றம் கண்டதால், ஏழை, எளிய மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சென்னையில், 22 காரட் ஒரு சவரன் ஆபரண தங்கம் ஆயிரத்து 280 ரூபாய் உயர்ந்து, ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம், வெள்ளி விலை நிலவரம்சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சம் தொட்டது. காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 என உயர்ந்தது. இதே போல வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.12,000 அதிகரித்தது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே, தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் தங்கம் விலை குறைந்து, மீண்டும் உயர்ந்தும் வருகிறது. கடந்த வார விலை நிலவரம்22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 16ஆம் தேதி ஒரு சவரனுக்கு ரூ.480 குறைந்திருந்தது. ஒரு சவரன் ரூ.1,05,840 என விற்பனை ஆனது. இந்நிலையில், விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ரூ.1,07,600 ஆக இருந்தது. இன்று காலை நிலவரம் இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஜனவரி 20ஆம் தேதி காலை நிலவரப்படி, ஒரு கிராமுக்கு ரூ.160 என உயர்ந்து, ரூ.13,610க்கு விற்பனை ஆனது. சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து, ரூ.1,08,880-க்கு விற்பனை ஆனது.வெள்ளி விலையும் இன்று புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.12 உயர்ந்து, ரூ.330க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து, ரூ.3,30,000க்கும் விற்பனை ஆனது.இதையும் பாருங்கள் - இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் வெளிநடப்பு