உத்தரபிரதேசம்... கணவன் - மனைவி இடையே தொடர்ந்து ஏற்பட்ட சண்டை. மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவன். காவல்நிலையத்தில் சரணடைந்தவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்த போலீஸ். அடுத்தடுத்த விசாரணையில வெளியான அதிர்ச்சி தகவல். கட்டிய மனைவியை கணவனே கொலை செய்தது ஏன்? பின்னணி என்ன?இரவு நேரத்தில் சண்டையிட்ட சச்சின் - ஸ்வேதா ஜோடிநைட்டு நேரத்துல சச்சின் - ஸ்வேதா தம்பதிக்கு இடையில பயங்கர சண்டை ஏற்பட்டிருக்கு. இந்த சத்தத்த கேட்ட அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க ஸ்வேதாவோட வீட்டுக்கு போய் பாத்துருக்காங்க. அங்க ஸ்வேதா கழுத்துல காயங்களோட உயிரிழந்து கிடந்துருக்காங்க. ஆனா அந்த நேரத்துல கணவன் சச்சின் வீட்ல இல்ல. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொன்னாங்க. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அதுக்கப்புறம் பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட போலீஸ் விசாரணையில இறங்குனாங்க. அப்ப, கணவன் - மனைவிக்கு இடையில ரொம்ப நேரமாக சண்டை ஏற்பட்டிருந்துச்சு, ரெண்டு பேரையும் சமாதானப்படுத்த அவங்க வீட்டுக்கு போனோம், அப்ப ஸ்வேதா உயிரிழந்து கிடந்தாங்கன்னு சொல்லிருக்காங்க. இதுக்கிடையில ஃபதேபூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன சச்சின், சார் நான் என் மனைவி ஸ்வேதாவ கொலை பண்ணிட்டேன்னு சொல்லி சரணடைஞ்சுருக்காரு. இதனால, போலீஸ் சச்சின கஸ்டடியில எடுத்து விசாரிச்சாங்க. உயிருக்கு உயிராக காதலித்து வந்த சச்சின் - ஸ்வேதாஉத்தரபிரதேசத்துல உள்ள மோகன்பூர் கிராமத்த சேந்த சச்சினும், அதே பகுதிய சேந்த ஸ்வேதா-ங்குற பெண்ணும் உயிருக்கு உயிரா காதலிச்சுட்டு இருந்தாங்க. ஆனா, இவங்க காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிச்சுருக்காங்க. இதனால வீட்டை விட்டு வெளியேறுன இந்த காதல் ஜோடி, பெற்றோருக்கு தெரியாம திருமணம் பண்ணிக்கிட்டாங்க. அடுத்து சூரத்துக்கு போன இந்த தம்பதி, அங்கொரு வீட்ட வாடகைக்கு எடுத்து தங்கிருக்காங்க. சச்சின் ஒரு ஃப்ரைவேட் கம்பெனியில வேலை பாத்துட்டு இருந்துருக்காரு. ஆனா அங்க போதுமான வருமானம் இல்லாததால சச்சின் தன்னோட மனைவிய கூப்டுட்டு கான்பூருக்கு வந்துருக்காரு. அப்புறம் பல இடங்கள்ல வேலை தேடி அலைஞ்சுருக்காரு. ஆனா எங்கையும் வேலை கிடைக்காததால, சச்சின் ஆட்டோ ஓட்ட ஆரம்பிச்சுருக்காரு. காலையில ஆட்டோ ஓட்ட போற சச்சின், மதிய சாப்பாட்டுக்கும், நைட்டு சாப்பாட்டுக்கும் தான் வீட்டுக்கு வருவாராம்.எதிர் வீட்டில் தங்கியிருந்த மாணவர்களுடன் பழகிய ஸ்வேதாகணவன் வீட்டுக்கு வரும் போதெல்லாம் ஸ்வேதா எந்நேரமும் ஃபோன் யூஸ் பண்ணிக்கிட்டே இருந்துருக்காங்க. அதே மாதிரி எதிர்வீட்ல உள்ள பொறியியல் மாணவர்கள் கூடவும் க்ளோஸா பழகிருக்காங்க ஸ்வேதா. இது சச்சினுக்கு சுத்தமா பிடிக்கல. இதனால சச்சின், மனைவிய பலமுறை கண்டிச்சுருக்காரு. எதிர் வீட்டு பசங்க கூட எதுக்கு பேசுற, அவனுங்கள பாத்தா நல்லவங்க மாதிரி தெரியல, நீ அவங்க கிட்ட பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்கல, அதனால அந்த பொறியியல் மாணவர்கள் கூட பழகுறத நிறுத்திக்கோன்னு சொல்லிருக்காரு. ஆனா, கணவனோட பேச்ச மனைவி ஸ்வேதா கண்டுகிறல. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ப்ரண்டோட திருமண நிகழ்ச்சிக்கு போன சச்சின், நைட்டு 11 மணிக்கு தனது வீட்டுக்கு திரும்பிருக்காரு.பொறியியல் மாணவர்களை வீட்டிற்கு வரவழைத்த ஸ்வேதாஅப்ப வீட்டுக்குள்ள அந்த பொறியியல் மாணவர்கள உட்கார வச்சு ஸ்வேதா பேசிட்டு இருந்துருக்காங்க. இதபாத்து கோபமான சச்சின், அந்த மாணவர்கள விரட்டி விட்டுட்டு மனைவி கூட சண்டை போட்ருக்காரு. ரெண்டு பேரும் பயங்கரமா சண்டை போட்டதால அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க போலீஸ்க்கு போன் பண்ணி தகவல சொல்லிட்டாங்க. இதனால சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரெண்டு பேரையும் போலீஸ் ஸ்டேஷன் கூப்டுட்டு போய் அறிவுரை சொல்லி அனுப்பி வச்சுருக்காங்க. ஆனா வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் மறுபடியும் கணவன் - மனைவிக்கு இடையில பிரச்னை ஏற்பட்டிருக்கு. அப்ப மனைவி எனக்கு அந்த பசங்கள ரொம்ப பிடிச்சுருக்கு, நான் அவங்க கூட பழகுவேன், நீ என்ன கேள்வி கேட்கக் கூடாதுன்னு சொல்லிருக்காங்க. இதனால ஆத்திரமடைஞ்ச சச்சின் மனைவிய போட்டு சரமாரியா அடிச்சுருக்காரு. அடுத்து அவங்கள கழுத்த நெரிச்சு கொன்ன சச்சின், அங்கருந்து தப்பிச்சு போலீஸ் ஸ்டேஷன்ல சரணடைஞ்சுருக்காரு. விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் சச்சின அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க. இதையும் பாருங்கள் - காங்கிரஸ் கட்சியினருக்கு கடிவாளம்