கரூரில், தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, செந்தில் பாலாஜி தான் முழு காரணம் என, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சுமத்தியிருந்த நிலையில், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த குறுகிய மனப்பான்மையோடு பேசும் நயினார் நாகேந்திரனுக்கு, பதில் சொல்லி தமது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். மேலும் விஜய் செய்த தவறுகள் குறித்து நயினார் நாகேந்திரன் பேசாதது ஏன்? என்றும் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.