பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் சுட்டு கொல்லப்பட்ட புகைப்படங்களை பார்த்து ரத்தம் கொதித்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் மாநிலத்துக்கு சென்றுள்ள அவர், புஜ் பகுதியில் 53 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான மின் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஒரே நாள் இரவில் 22 நிமிடங்களில் 9 பயங்கரவாத தளங்களை அழித்ததாக பெருமிதம் தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானின் ஒரே இலக்கு இந்தியாவுடன் பகையை வளர்த்துக் கொண்டு தீங்கு விளைவிப்பது மட்டுமே என்று கூறிய பிரதமர் மோடி, பொருளாதாரத்தை வளர்த்து, வறுமையை ஒழித்து முன்னேறுவது மட்டுமே நமது குறிக்கோள் என்றார்.