news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "தேசத்திற்கு எதிரான மத்திய அரசின் செயல்" - ராகுல்காந்தி
tv

Also Watch

tv

Read this

"தேசத்திற்கு எதிரான மத்திய அரசின் செயல்" - ராகுல்காந்தி

ஒரு போதும் நிறைவேறாது

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தென்மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள், சிறிய மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசின் செயல் தேசத்திற்கே எதிரானது, மத்திய பாஜக அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றும் ராகுல்காந்தி திட்டவட்டமாக கூறி உள்ளார்.

மக்களவையில் ராகுல்காந்தி பேச்சு
தொகுதி மறு​வரையறை தொடர்​பான 3 மசோ​தாக்​கள் மக்களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மசோ​தாக்​கள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான விவாதத்தின் போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசி பேசியதாவது:
தற்போதைய மசோதா மகளிருக்கானது அல்ல. 2023ல் வந்ததே மகளிருக்கான மசோதா. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா தேச விரோதமானது. இது தேசத்தின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி. அதை மகளிர் மசோதா போர்வையில் செய்கிறார்கள். மத்திய அரசின் இந்தச் செயல் வெட்கக்கேடானது.

பிரியங்கா, பெருமை...
பெண்களே, நம் நாட்டின் மையப் புள்ளி. இந்த அவையில் உள்ள ஒவ்வொருவரும், தங்கள் வாழ்வில் தாயாக, சகோதரியாக, மனைவியாக உள்ள பெண்களிடமிருந்து ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டிருப்பார்கள். இந்த அவையில் எனது சகோதரி பிரியங்கா காந்தி பேசியதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். இந்திய அரசியலில் தற்போது நிகழ்ந்து வரும் மாற்றங்களைக் கண்டு பாஜக பயப்படுகிறது. உண்மை என்பது பல நேரங்களில் இருளில் தான் மறைந்திருக்கிறது. “இருட்டைப் பார்த்து பயப்படக்கூடாது,” என இந்திரா காந்தி கூறியிருக்கிறார். உண்மையைப் பற்றி பேசுவதில் எனக்கு எந்த பயமும் இல்லை.

ஒரு போதும் நிறைவேறாது
தாங்கள் அடைய விரும்பும் இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள, அரசியலமைப்பு திருத்தம் ஒன்று தேவை என்பதை பாஜக நன்கு உணர்ந்து உள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை தவிர்த்து, பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களின் அதிகாரத்தைப் பறிப்பதே இந்த மசோதாவின் நோக்கம்.

இந்தியாவின் அதிகாரக் கட்டமைப்பில் ஓபிசி மற்றும் தலித்துகளுக்கு பாஜக எவ்வித இடமும் அளிப்பதில்லை. உங்கள் பலம் குறைவது கண்டு நீங்கள் நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றத் துணிந்து விட்டீர்கள். முன்பு, அசாம் மற்றும் காஷ்மீரில் நீங்கள் இதைச் செய்தீர்கள். இப்போது அதைப்போலவே அனைத்து மாநிலங்களிலும் செய்ய நினைக்கிறீர்கள். ஆனால், இந்த மசோதா ஒரு போதும் நிறைவேறாது. இதனால் தென்னிந்திய மக்களும் வடகிழக்கு பிராந்திய மக்களும் கவலைப்பட வேண்டாம்.
இவ்வாறு ராகுல்காந்தி பேசி உள்ளார்.

Related Link
மறுவரையறை இன்றி, மகளிருக்கு ஒதுக்கீடு தேவை - கனிமொழி உரை

மறுவரையறை இன்றி, மகளிருக்கு ஒதுக்கீடு தேவை - கனிமொழி உரை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசில் அடிக்கலாம், நாட்டை கொடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ்

5
8 mins agoshare
விஜய் குறித்து பிரகாஷ்ராஜ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved