news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews செந்தில் பாலாஜிக்கு தனி மூளை, நக்கலுடன் சீறிய இபிஎஸ்
tv

Also Watch

tv

Read this

செந்தில் பாலாஜிக்கு தனி மூளை, நக்கலுடன் சீறிய இபிஎஸ்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இபிஎஸ் அட்வைஸ்

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சொந்த சின்னத்தையே மறந்துபோன ஒருவரிடம் மீண்டும் நாட்டைக் கொடுத்தால் உருப்படுமா? என கேள்வி எழுப்பி உள்ள எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகள் டிரான்ஸ்பர் ஆவதுபோல் கரூரில் இருந்து கோவை தெற்கிற்கு டிரான்ஸ்பர் ஆகி வந்துள்ள செந்தில் பாலாஜி கொரோனா வைரஸைவிட மோசமானவர் என விமர்சனம் செய்துள்ளார். கோவையில் பிரச்சாரம் மேற்கொண்ட இபிஎஸ், மலை மீது மோதினால் மண்டைதான் உடையும் என பிரதமர் மோடியுடன் மோதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார்.

கோவையில் இபிஎஸ்
கோவை வடக்​கு, கோவை தெற்கு, சிங்​காநல்​லூர் சட்டசபைத் தொகுதி அதி​முக மற்றும் கூட்​டணிக்கட்சி வேட்​பாளர்​களை ஆதரித்து அதி​முக பொதுச் செய​லா​ளர் இபிஎஸ் பேசி​ய​தாவது:
காற்​றில் பரவும் கொரோனா வைரஸை விட கொடுமை​யானது கோவை தெற்கு தொகு​தி​யில் இன்​றைக்கு பரவி உள்​ளது.

Related Link
பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

            


கொரோனா வைரஸூக்கு மருந்து உள்​ளது. கோவை தெற்கு தொகு​தி​யில் போட்​டி​யிடும் திமுக வேட்​பாள​ருக்கு தோல்​வியைத் தர வேண்​டும். ஐந்து கட்​சிகள் மாறிய அரசி​யல் வியா​பாரியை மக்​கள் நம்ப வேண்​டாம். மக்​களை நம்பி அதி​முக நிற்​கிறது. செந்​தில் பாலாஜி ஏன் கரூரில் நிற்​க​வில்​லை? கரூரை சுரண்டி முடித்​து​விட்​டு, தற்​போது தொழில் மாநக​ரான கோவைக்கு வந்​துள்​ளார். கருணாநிதி இருக்​கும்​போது செந்​தில்​பாலாஜி சட்​டப்​பேர​வை​யில் என்​னென்ன பேசி​னார் என்​பது இன்​ன​மும் உள்​ளது. அரக்​கனை விட கொடிய​வர் கோவை தெற்கு தொகு​தி​யில் போட்​டி​யிடு​கி​றார்.

அதிகாரிகள் மீது...
ஆட்சி மாறும்​போது காட்சி மாறும். இன்​றைக்கு ஆளுங்​கட்​சிக்கு துணை​யாக இருக்​கும் அதி​காரி​கள் மீது, நடவடிக்கை எடுக்​கப்​படும். அதி​காரி​கள் உரிய முறை​யில் வேலை செய்ய வேண்​டும். தொகுதி மறு​வரையறைக்கு எதி​ராக திமுக கருப்​புக்​கொடி போராட்​டத்தை கையில் எடுத்​துள்​ளது. ஆனால் கோவை​யில் எங்​கும் நான் கருப்​புக் கொடிகளை பார்க்​க​வில்​லை. தொகுதி மறு​வரையறை​யால் எந்த விதத்​தி​லும் தமி​ழ​கம் பாதிக்​காது என மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா தெரி​வித்​துள்​ளார். மத்​திய அரசு தொகுதி மறு​வரையறையை எவ்​வித பாதிப்​பும் இன்றி எல்லா மாநிலங்​களுக்​கும் பாரபட்​சமில்​லாமல் அரு​மை​யாக செயல்​படுத்​தும்.

அரசியல் நாடகம்
மத்​திய அரசு மிகத் தெளி​வாக இருக்​கிறது. நாடாளு​மன்​றத்​தில் பெண்​களுக்கு 33 சதவீத இட ஒதுக்​கீட்​டால் மத்​திய அரசுக்கு பெண்​கள் மத்​தி​யில் நல்ல பெயர் கிடைத்​து​விடும் என்​பதை தடுக்​கவே கருப்​புக் கொடி போராட்​டம் என்ற பெயரில் அரசி​யல் நாடகம் நடத்​துகி​றார். மத்​திய அமைச்​சர​வை​யில் திமுக இடம்​பெற்​ற​போது எந்த திட்​டங்​களும் தரவில்​லை. இன்​றைக்கு தமி​ழ​கத்​தில் சட்​டம் ஒழுங்கு சந்தி சிரிக்​கிறது. அதி​முக ஆட்சி அமைந்த முதல் 3 மாதத்​தில் முழு​மை​யாக நடவடிக்கை எடுக்​கப்​படும். கடந்த 5 ஆண்​டில் கோவைக்கு என்ன திட்​டங்​களை திமுக செய்​தது என பட்​டியலிட்டு சொல்ல முடி​யு​மா?
இவ்​வாறு எடப்பாடி பழனிசாமி பேசி, வாக்கு சேகரித்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவுக்கு மகளிர் பதிலடி கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்

1
1 hr 26 mins agoshare
கோவையில் பிரதமர் மோடி...button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved