news-tamil-logo

3/18/2026, 4:26:19 PM

news-tamil-logo
more
Advertisement
Home news சவால்விட்ட அங்கன்வாடி ஆசிரியை
tv

Also Watch

tv

Read this

சவால்விட்ட அங்கன்வாடி ஆசிரியை

தரிமேலா, ஆந்திரா

Posted on: Feb 04, 2026 11:59 AM

21

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அங்கன்வாடி ஆசிரியையின் தலையை துண்டாக வெட்டி அதனை கையில் வைத்துக்கொண்டு ஒரு பெண் உட்பட 3 பேர் ஊருக்குள் உலாவந்த அதிர்ச்சி சம்பவம். தனது தாயின் தலையை பார்த்து பதறியடித்து ஓடிய மகன். மகனையும் விடாமல் விரட்டி வெட்டிப்போட்ட 3 பேர். அங்கன்வாடி ஆசிரியையும் அவரது மகனையும் கொடூரமாக கொலை செய்த 3 பேர் யார்? அந்த 3 பேருக்கும் அங்கன்வாடி ஆசிரியை மற்றும் அவரது மகனுக்கும் என்ன சம்மந்தம்?

அங்கன்வாடி ஆசிரியையின் வீட்டுக்குள் புகுந்த பெண்
ஒரு லேடி, தன்னோட ரெண்டு மகன்களோட அங்கன்வாடி ஆசிரியை வீட்டுக்குள்ள திபுதிபுனு போயிருக்காங்க. அந்த சத்தம் கேட்டதும் கத்தி கூப்பாடு போட்ருக்காங்க அங்கன்வாடி ஆசிரியை. ஆனா, அரிவாளோட இருந்த ரெண்டு இளைஞர்களும் சேர்ந்து அங்கன்வாடி ஆசிரியை தலையை துண்டா வெட்டி அத கையில வச்சிக்கிட்டு ஊருக்குள்ள நடந்து போயிருக்காங்க. அதேமாதிரி, அந்த ரெண்டு இளைஞர்களோட அம்மாவும் தன்னோட மகன்கள் ஏதோ சாதிச்சமாதிரி பெருமையா நடந்து போயிருக்காங்க. அப்போ, எதிர்ல நடந்து வந்த அங்கன்வாடி ஆசிரியையோட மகன் தாயோட தலை தனியா இருந்தத பாத்து அச்சத்துல தலைதெறிக்க ஓடிருக்காரு.

தாய்-மகன் சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை
ஆனா, விடாம வெரட்டுன அந்த ரெண்டு இளைஞர்கள், ஓடுன இளைஞரை அரிவாளால வெட்டி கொன்னுருக்காங்க. அதப்பாத்து அஞ்சி நடுங்குன ஊர் மக்கள் அடுத்து ஒரு கொலை நடக்குறதுக்குள்ள போலீசுக்கு தகவல் சொல்லணும்னு அரக்க பறக்க போன் பண்ணி ஊருக்குள்ள நடந்த ரெட்டைக்கொலைய பத்தி சொல்லிருக்காங்க. ஆனா, போலீசார் வர்றதுக்குள்ள தாயும் மகன்களும் அங்க இருந்து எஸ்கேப் ஆகிட்டாங்க. அடுத்து, அங்க வந்த போலீசார் தாய்-மகன் ரெண்டுபேரோட சடலங்களையும் மீட்டு போஸ்ட் மார்டத்துக்காக அனுப்பி வச்சிட்டு உள்ளூர் மக்கள்கிட்ட விசாரணை நடத்திருக்காங்க. அப்பதான், கொலைக்கான காரணமே தெரியவந்துருக்குது.

நல்லப்பா உயிரிழந்ததால் 2 மனைவிகளுக்குள் தகராறு
ஆந்திர மாநிலம், அனந்தபூர் தரிமேலா கிராமத்தை சேர்ந்தவர்தான் 38 வயசான எல்லம்மா. நல்லப்பாங்குறவரோட ரெண்டாவது மனைவியான இவங்க உள்ளூர் அங்கன்வாடியில ஆசிரியராக வேலை பாத்துட்டு இருந்துருக்காங்க. இவங்களுக்கு 22 வயசுல சின்னாங்குற ஒரு மகன் இருந்தான். சமீபத்துல நல்லப்பா உடல்நிலை சரியில்லாம உயிரிழந்துட்டாரு. அவரு உயிரோட இருந்தவரைக்கும் முதல் மனைவி லட்சுமிதேவிக்கும் ரெண்டாவது மனைவி எல்லம்மாவுக்கும் பெருசா எந்த சண்டையுமே வந்தது இல்ல. முதல் மனைவி ஒரு வழியில போனா ரெண்டாவது வேற வழியில போயிருவாங்க. முகத்தகூட பாக்குறது இல்ல. ஆனா, நல்லப்பா உயிரிழந்தபிறகு ரெண்டு மனைவிகளுக்குள்ளும் பெரிய வார்த்தை யுத்தமே நடந்துருக்குது.

நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என எல்லம்மா சவால்
நல்லப்பா பேர்ல வீடு, வயல், காலி இடம்னு நிறைய சொத்து இருக்குது. அந்த சொத்து சட்டப்படி முதல் மனைவிக்கும், அவரோட பிள்ளைகளுக்கும்தான் சேரும்னு சொன்ன லட்சுமிதேவி வாழ்க்கையில பங்குபோட்டா சொத்தையும் பங்குபோட முடியாதுனு சொல்லிருக்காங்க. அதுக்கு, நானும் நல்லப்பாவோட மனைவிதான், அவரோட மகன் சின்னா, அதனால எங்களுக்கும் சொத்துல சம உரிமை இருக்குதுனு சண்டை போட்ருக்காங்க. இந்த சொத்து சண்டை கடந்த சில மாசங்களாகவே புகைஞ்சிகிட்டே இருந்துருக்குது. சொத்த விட்டுக்குடுக்க முடியாதுனு உறுதியா இருந்த லட்சுமிதேவி, எல்லம்மாவுக்கும் அவங்களோட மகனுக்கு கொலை மிரட்டல் விடுத்துருக்காங்க. ஆனாலும், அசராத எல்லம்மா நீதிமன்றத்துல பாத்துக்கலாம், சொத்துல சமஉரிமை வாங்கி காட்றேனு சவால் விட்ருக்காங்க. அது, லட்சுமி தேவியையும் அவங்களோட மகனையும் ஆத்திரத்தோட உச்சிக்கு கொண்டு போயிருக்குது.

லட்சுமி தேவி, அவரது 2 மகன்களையும் தேடிவரும் போலீசார்
அதுக்குப்பிறகுதான், அரிவாளோட எல்லம்மா வீட்டுக்கு போயிருக்காங்க. வீட்ல அவங்க மட்டும் இருந்ததால அரிவாளால தலையை மட்டும் வெட்டி எடுத்து ஊருக்குள்ள நடந்து போயிருக்காங்க. எதிர்ல நடந்து வந்த சின்னாவையும் அரிவாளால வெட்டிக் கொலை செஞ்சிருக்காங்க. ரெண்டு கல்யாணம் முதல் சொத்து விவகாரம் வரைக்கும் ஊருக்குள்ள உள்ள எல்லாருக்குமே தெரியும் அப்டிங்குறதால உள்ளூர் மக்களே தெளிவா சொல்லிருக்காங்க. இந்த கொலை சம்மந்தமா வழக்குப்பதிவு பண்ணிருக்க போலீசார் தாயையும், மகனையும் வலைவீசி தேடிட்டு இருக்காங்க.

Related Link
சிவப்பு நிற சூட்கேஸில் இருந்தது என்ன?

சிவப்பு நிற சூட்கேஸில் இருந்தது என்ன?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"

0
0 min agoshare
ABD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved