கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நிலையில் பல்வேறு நாடுகளில் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் திரும்பிய திசையெல்லாம் மின் விளக்குகளால் செய்யப்பட்ட அலங்காரங்கள், காண்போரின் கண்களை பறிக்கும் வண்ணம் உள்ளன. இதுபோல, தைவான் நாட்டில் உள்ள வீதிகளும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வண்ணமயமாக மாறியுள்ளன.