2026 சட்டமன்ற தேர்தலுக்கு, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 234 தொகுதிகளுக்கும் பொதுச் சின்னமாக விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பது, இத்தனை நாட்களாக துவண்டு போயிருந்த த.வெ.க. முகாமை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சினிமாவில் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடிய விசில் சத்தமே, விஜய்யின் அரசியல் கட்சி சின்னமாக கிடைத்திருப்பது மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க எளிதாக மாறியிருக்கிறது. த.வெ.க.வினருக்கு அடுத்தடுத்து நெருக்கடிஜனநாயகன் சிக்கல், கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை என நெருக்கடி காலத்தில் இருந்த த.வெ.க.வினருக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருக்கிறது. அதிமுகவும், திமுகவும் கூட்டணியை இறுதி செய்வதிலும், தொகுதி பங்கீட்டை முடிப்பதிலும் தீவிரம் காட்டி வரும் நிலையில், த.வெ.க. சில நாட்களாக மௌனமாகவே இருந்து வந்தது. குறிப்பாக, டிசம்பர் 17ஆம் தேதி ஈரோட்டில் பிரச்சாரத்திற்கு வந்த விஜய், அதற்கு பிறகு வேறு எந்த அரசியல் நிகழ்விலும் பங்கேற்கவில்லை. இதனிடையே, ஜனநாயகன் பட சென்சார் பிரச்சனை, கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜர் என த.வெ.க.வினருக்கு அடுத்தடுத்து நெருக்கடியாக அமைந்தது.விசில் சின்னம் ஒதுக்கீடுஇந்நிலையில், திடீரென தேர்தல் ஆணையத்தில் இருந்து வெளியான அறிவிப்பு த.வெ.க.வினரை உற்சாக மிகுதியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் பொதுச் சின்னமாக தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சின்னம் கேட்டு விண்ணப்பித்த போது, விருப்பமான சின்னங்களின் பட்டியலில் விசில் சின்னமும் இடம் பெற்றிருந்தது என்ற நிலையில், த.வெ.க.வினர் கேட்டது மாதிரியே விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் விசில் பறக்கும்தமிழகத்தில், தற்போது இருக்கும் அரசியல் கட்சி சின்னங்களில் பெருவாரியான மக்கள் மனதில் ஆழப் பதிந்தது என்றால் உதயசூரியனும், இரட்டை இலையும் தான். சின்னத்தை வைத்து, அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு போடும் நடைமுறை இன்னும் பல கிராமங்களில் இருந்து வருகிறது. ஆகையால், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் சின்னம் என்பது முக்கிய பங்கு வகிக்கும். அந்த வகையில், விசில் சின்னத்தை விரும்பி விஜய் தேர்வு செய்ததற்கு பின்னணியில் பல வியூகங்கள் இருக்கிறது. சினிமா நடிகரான விஜய்க்கும், அவரது ரசிகர்கள் CUM தொண்டர்களுக்கும் இடையேயான EMOTIONAL CONNECT-ஆக விசில் சத்தம் பார்க்கப்படுகிறது. எப்போது விஜய் படம் ரிலீஸ் ஆனாலும் தியேட்டர்களில் விசில் பறக்கும். மனதில் நிற்கும் விசில் சின்னம்தற்போது, விஜய்யின் அரசியல் நிகழ்ச்சிகளில் கூட விசில் சத்தம் அனல் பறக்க தான் செய்கிறது. இந்த நிலையில், தனது ரசிகர்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருந்த விசில் சத்தத்தை மனதில் வைத்து விஜய்யும் விசில் சின்னத்தை விரும்பி தேர்வு செய்ததாக சொல்கிறார்கள். அதேபோல, வீட்டில் குக்கர் விசிலில் தொடங்கி பேருந்து கண்டக்டர் விசில், போலீஸ் விசில், கூர்கா விசில் என தினம் மக்கள் வாழ்க்கையில் கனெக்ட்டாக இருக்கும் என்பதால், அனைத்து தரப்பு மக்களுக்கும் மனதில் நிற்கும் படியாக விசில் சின்னம் அமையும் என சொல்லப்படுகிறது.சினிமாவில் அடையாளமாக இருந்த விசில்கடந்த 2019ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படத்திற்கு பிகில் என பெயர் வைக்கப்பட்டது. விசில் என்பதை பேச்சுவாக்கில் சிலர் பிகில் என குறிப்பிடுவதுண்டு. அதோடு, படத்தில் FOOT BALL விளையாடும் கதாபாத்திரமாக வரும் விஜய், அடிக்கடி விசிலை பயன்படுத்துவார். பிகில் திரைப்படம் தெலுங்கில் 'Whistle' என்ற பெயரிலேயே வெளியானது. அதே மாதிரி, 2024ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன GOAT படத்தில் வரும் விஜய்யின் அறிமுக பாடலில் முழுக்க முழுக்க விசிலை மையப்படுத்தி தான் வரிகள் வரும். விஜய் விசிலை ஊதும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். தற்போது தேர்தல் ஆணையம் முடிவு மூலம் சினிமாவில் அடையாளமாக இருந்த விசில் என்பதே அரசியல் களத்திலும் சின்னமாக மாறியிருப்பது விஜய்க்கு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது. விஜய்யின் சினிமா வாழ்க்கைக்கும், அரசியல் எண்ட்ரீக்கும் இடையே பிணைப்பாக விசில் அமைந்து இருப்பதால், சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க பெரிய அளவில் மெனக்கெட தேவை இல்லை என்பது சாதகமாக பார்க்கப்படுகிறது. த.வெ.க.வினருக்கு கூடுதல் பூஸ்ட்மேலும், கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் பெரிய அளவில் மக்கள் சந்திப்பை நடத்தவில்லை. தமிழ்நாட்டில் ஈரோட்டில் மட்டுமே பிரச்சாரம் செய்தார். இனிமேல் தான் விஜய்யின் தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் என்ற நிலையில், அதற்கு முன்பாகவே கையில் சின்னம் கிடைத்திருப்பது த.வெ.க.வினருக்கு கூடுதல் பூஸ்ட்டாக அமைந்திருக்கிறது. தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில் விசில் சின்னம் கிடைத்தது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து பதிவு போட்டுள்ள விஜய், தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடு தான் விசில் எனக் குறிப்பிட்டுள்ள விஜய், பாதுகாவலர்கள் கையில் இருப்பதும் விசில் தான் எனவும், த.வெ.க., பெறப் போகும் வெற்றியை கணித்து கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்தார். அதோடு, நல்லவர்கள் சின்னம், நாடு காப்பவர்கள் சின்னம், ஊழலை ஒழிக்கும் சின்னம், தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில் எனக் குறிப்பிட்டுள்ளார் விஜய். Related Link வரலாறு காணாத இமாலய உச்சம்