news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news வதந்திகளை நம்ப வேண்டாம் - த.வெ.க. திட்டவட்டம்
tv

Also Watch

tv

Read this

வதந்திகளை நம்ப வேண்டாம் - த.வெ.க. திட்டவட்டம்

சி.டி.ஆர்.நிர்மல்குமார் வெளியிட்டுள்ள பதிவு

18

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

எந்த ஒரு கட்சியின் தலைவருடனும், எந்த மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என தவெக மறுப்பு தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் பேசப்பட்டதையும் சுட்டிக் காட்டி விளக்கம் அளித்து உள்ளது.

வதந்திகளை நம்ப வேண்டாம்
இதுதொடர்பாக, தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வெளியிட்ட பதிவு:
வதந்திகளை நம்ப வேண்டாம். சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பாஜக, அதிமுக அல்லது சசிகலா, மருத்துவர் ராமதாஸ் உள்ளிட்டோரை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

இல்லை... இல்லை...
குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

இதே போன்ற பொய்ச் செய்தி உத்தியை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்பு படுத்தியும் கடந்த காலங்களில் கடை பிடிக்கப்பட்டதும், அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

பொய்ச்செய்தி
இருப்பினும் பொது மக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன.

பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம். வாய்மையே வெல்லும்.
இவ்வாறு CTR. நிர்மல் குமார் பதிவிட்டு உள்ளார்.

Related Link
பறக்கும் படை தயார் - அர்ச்சனா பட்நாயக்

பறக்கும் படை தயார் - அர்ச்சனா பட்நாயக்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
9 hrs 46 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved