news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news பறக்கும் படை தயார் - அர்ச்சனா பட்நாயக்
tv

Also Watch

tv

Read this

பறக்கும் படை தயார் - அர்ச்சனா பட்நாயக்

தொந்தரவு செய்யக்கூடாது

20

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர், அவர்கள் அனைவரும் வாக்களிக்க தகுந்த விழிப்புணர்வு அளிக்கப்படும் என்று, தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ArchanaPatnaik கூறி உள்ளார்.

பறக்கும் படை தயார்
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது;
பொதுத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. தேர்தல் களத்தில், 2,106 பறக்கும் படை வீரர்கள் கண்காணிப்பு பணியில், ஈடுபட உள்ளனர். காலை 11 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். பொது விடுமுறை நாட்கள் தவிர, மற்ற நாட்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். மார்ச் 30 முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

தொந்தரவு செய்யக்கூடாது
உரிய ஆவணங்கள் இருந்தால் பணம் பறிமுதல் செய்யப்படாது, பணம் தொடர்பான கட்டுப்பாடுகளில் பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. மக்கள் தகுந்த ஆவணங்களை வைத்திருந்தால், பணத்தை உடனே திருப்பித்தர உத்தரவிட்டு உள்ளோம்.

வாக்காளர்கள் கவனத்திற்கு...
எந்த வாக்குச்சாவடியில் வாக்கு உள்ளது என்பதை வாக்காளர்கள் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். வாக்குச் சாவடிகளில் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க பெட்டக வசதி செய்து தரப்படும். மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என தேர்தல் பறக்கும் படைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

புதிய வாக்காளர்கள்...
மார்ச் 26ஆம் தேதி வரை புதிய வாக்காளர்கள் ஆன்-லைன் மூலம் பதிவு செய்யலாம். இதுவரை ரூ.1.26 கோடி மதிப்புள்ள ரொக்கம், பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஆன்-லைன் மூலம் மட்டுமே பிரச்னைகளுக்கு அனுமதி கேட்க வேண்டும்.
இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட விபரீதம்

0
9 mins agoshare
மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட விபரீதம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved