Also Watch
Read this
மறைந்தார் பாக்யராஜ்...
தமிழ் சினிமாவின் திரைக்கதை வித்வான் என்ற போற்றப்பட்டவரும், பன்முக கலைஞருமாகவும் திகழ்ந்த கே.பாக்யராஜ், காட்சிக்கு காட்சி சுவாரஸ்யம் கூட்டுவது, சிறு சிறு கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பது இவரது திரைக்கதையின் பலம். இவரது படங்களில் கிளைமாக்ஸ் எப்போதுமே பார்வையாளர்கள் சிந்திக்கக்கூடிய வகையிலும், முற்றிலும் எதிர்பாராத விதமாகவும் இருக்கும். திரைப்படம் போலவே இவரது மறைவும் முற்றிலும் எதிர்பாராத விதமாக அமைந்தது தான் பேரதிர்ச்சி. திடீர் மாரடைப்பால் உயிரிழந்த கே.பாக்யராஜின் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில், திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

மறைந்த திரைக்கதை சக்ரவர்த்தி பாக்யராஜின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
வீட்டில் இருந்து காலை 9 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டு, பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் உடல் தகனம்
திரைக்கதை சக்ரவர்த்திக்கு அரசு மரியாதை
திரைக்கதை சக்ரவர்த்தி பாக்யராஜ் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க 24 காவலர்கள் அரசு மரியாதை செலுத்தினர்.



