காட்டுப் பகுதியில பாதி எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண்ணின் சடலம். சிதறிக் கிடந்த வளையல்களை வைத்து உயிரிழந்த பெண்ணை அடையாளம் கண்ட போலீஸ். தலைமறைவாகி இருந்த இளம்பெண்ணின் கணவன் மற்றும் மாமியார். செல்போன் நம்பரை ட்ரேஸ் செய்து மும்பையில் பதுங்கியிருந்தவர்களை பிடித்த போலீஸ். இளம்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே என்ன பிரச்னை? கொடூர கொலையின் பின்னணி என்ன?மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் தந்தை புகார்கிராமத்துக்கு ஒதுக்குப்புறமான பகுதியில இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தாங்க. அப்ப அந்த பகுதியில பாதி எரிஞ்ச நிலையில இளம்பெண்ணோட சடலம் கிடந்துருக்கு. சடலத்து பக்கத்துல வளையல்கள் உடைஞ்சு போய் கிடந்துருக்கு. இதபாத்த இளைஞர்கள் உடனே போலீஸ்க்கு ஃபோன் பண்ணி தகவல சொல்லிட்டாங்க. இதனால சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சும், கீழ கிடந்த வளையல்கள கைப்பற்றியும் விசாரணையில இறங்குனாங்க. உயிரிழந்த பெண் யாரு? அவங்க எந்த பகுதியை சேந்தவங்கன்னு கிராம மக்கள் கிட்ட விசாரிச்சுருக்காங்க. அதுக்கு கிராம மக்கள் எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. இதுக்கிடையில தும்ரி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன முதியவர் ஒருத்தரு, சார் என் மகள் ஷாஹினுக்கு ரெண்டு மூணு நாட்களா ஃபோன் பண்ணி பார்த்தேன், அவ ஃபோன் ஸ்விட்ச் ஆப்ல இருக்கு, என் மருமகனோட ஃபோனும் ஸ்விட்ச் ஆப்ல இருக்கு, அதனால மகளோட வீட்டுக்கு போயும் பார்த்தேன், வீடும் பூட்டிக் கிடக்குது, என் மகள எங்க போனான்னு தெரியல, நீங்க தான் கண்டுபிடிச்சு தரனும்ன்னு சொல்லிருக்காங்க.ஷாஹினின் கணவரை வலை வீசி தேடிய காவலர்கள்அந்த புகார வாங்குன போலீஸ், காட்டுப்பகுதியில உயிரிழந்த கிடந்த பெண்ணோட சடலத்தையும், அங்க கிடந்த வளையலையும் முதியவர் கிட்ட காட்டிருக்காங்க. அத பாத்த முதியவர் இது என் மகளோட வளையல்ன்னு சொல்லிருக்காரு. இதனால உயிரிழந்தது ஷாஹின்னு கன்பார்ம் பண்ண போலீஸ் முதல்ல அவங்களோட வீட்டுக்கு போய் பாத்துருக்காங்க. அப்ப வீட்ல ஷாஹினோட கணவர், மாமியாருன்னு யாருமே இல்லை. இதனால அவங்க மேல சந்தேகமடைஞ்ச போலீஸ், கணவர் ஜாபீர் பத்தி அக்கம் பக்கத்துல விசாரிச்சுருக்காங்க. அதுக்கு, ஜாபீர் மும்பையில வேலை பாத்துட்டு இருந்தான், வாரத்துக்கு ஒரு முறை மனைவிய பாக்க வருவான், அதனால அவன் மும்பையில இருப்பான்னு சொல்லிருக்காங்க கிராம மக்கள். இதனால ஜாபீர்ரோட செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணிருக்காங்க போலீஸ். அப்ப சிக்னல் மும்பையில உள்ள ஒரு பகுதியில காட்டிருக்கு. இதனால நேரா அங்க போன போலீஸ் அங்க பதுங்கியிருந்த, ஜாபீரையும் அவரோட அம்மாவயும் கஸ்டடியில எடுத்து விசாரிச்சாங்க. அதுல தான் பல உண்மை தகவல்கள் வெளிவந்துருக்கு. Related Link ஸ்பாவில் Honey Trap மோசடி வேறொரு பெண்ணை காதலித்து வந்த கணவர் ஜாபீர்... இத பாத்த மனைவி இந்த நேரத்துல யார் கூட பேசிட்டு இருக்கிங்க, நீங்க யார் கூடவோ தகாத உறவுல இருக்கிங்க, அதான் இப்பல்லாம் என்ன பாக்குறதுக்கு கூட இங்க வர்றது கிடையாது, உங்களால என் வாழ்க்கையே நாசமா போய்ருச்சுன்னு சொல்லி அழுதுருக்காங்க. அடுத்து இனிமே நீங்க மும்பைக்கு வேலைக்கு போகக்கூடாது, நீங்க இங்கையே ஏதாவது வேலைய பாருங்கன்னு சொல்லிருக்காங்க. அதுக்கு கணவன், நீ சொல்றதையெல்லாம் என்னால கேட்க முடியாது, எனக்கு அவள பிடிச்சுருக்கு, நான் அவளையும் கல்யாணம் பண்ணிக்க போறேன், நீ என்னைய கேள்வி கேட்காத, மீறி இந்த பிரச்னைய பெருசு படுத்துனனா உன்ன உயிரோடையே விட மாட்டேன்னு சொல்லிருக்காரு. இதனால கணவன் - மனைவிக்கு இடையில பயங்கர பிரச்னை ஏற்பட்டிருக்கு. இந்த விஷயத்துல மாமியாரும் மருமகளுக்கு எதிராவே இருந்துருக்காங்க.ஜாபீர், மாமியார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலீஸ்ஆனா, தொடர்ந்து மனைவி அந்த தகாத உறவுக்கு தடையாவே இருந்துருக்காங்க. இதனால கடும் ஆத்திரமடைஞ்ச கணவன், நடந்த எல்லா விஷயத்தையும் தன்னோட காதலி கிட்ட சொல்லி, மனைவிய கொலை பண்ண திட்டம் போட்ருக்காரு. சம்பவத்தன்னைக்கு மனைவி கிட்ட பாசமா நடந்துக்கிட்ட ஜாபீர் அவங்கள தர்காவுக்கு கூப்டு போறாதா பொய் சொல்லிருக்காரு. அத நம்பி மனைவியும் அவரு கூட போய்ருக்காங்க. அவங்கள பின்தொடர்ந்து மாமியாரும், குடும்பத்தினர் சிலரும் போய்ருக்காங்க. அப்ப ஒரு காட்டுப் பகுதியில வச்சு பைக்க நிறுத்திய ஜாபீர், ஷாஹின்ன கழுத்த நெரிச்சு கொலை பண்ணிருக்காரு. அடுத்து அடையாளத்த மறைக்க சடலத்துல பெட்ரோல ஊற்றி எரிச்சுட்டு மும்பைக்கு தப்பிச்சு போய்ட்டாங்க. ஆனா செல்போன் நம்பர் மூலமா எல்லா உண்மையையும் கண்டுபிடிச்ச போலீஸ் ஜாபீர், அவரோட தாய், குடும்பத்தினர் சிலர்ன்னு மொத்தம் 7 பேர அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க. Related Link காதலிக்காக... மனைவிக்கு நேர்ந்த கொடூரம்