news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி
tv

Also Watch

tv

Read this

இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்

35

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
india win

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு, இந்திய அணி தகுதி பெற்றது. அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இறுதிப் போட்டிக்கு, இந்திய அணி தகுதி பெற்றதால், கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். மும்பை வான்கடே மைதானத்தில் திரண்டிருந்தவர்கள் வீரர்களை பாராட்டி முழக்கமிட்டனர். சர்வதேச அளவில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 8ஆவது இந்திய கிரிக்கெட் வீரர் என, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, புதிய மைல்கல்லை எட்டினார்.

இங்கிலாந்துக்கு எதிராக அபாரம்
டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்குள் நுழைந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணியும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 20 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து போராடி தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

குவிந்த வி.ஐ.பி.க்கள்
டி20 உலககோப்பை தொடரில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான தோனி மற்றும் ரோகித் சர்மா நேரில் கண்டு களித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை காண மூத்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என ஏராளமானோர் குவிந்தனர்.

8ஆம் தேதி இந்தியா- நியூசிலாந்து பலப்பரீட்சை
வரும் 8ஆம் தேதி நடைபெறும் டி20 உலககோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டி20 உலககோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி முதல் அணியாக ஃபைனலுக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா இரண்டாவது அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதனிடையே 2019ஆம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணிக்கு, தற்போது பதிலடி கொடுத்து பழி தீர்த்து கொள்ளுமா? என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில்...
* மும்பையில் நேற்று மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பும்ரா நிகழ்த்தியது உண்மையில் அபாரம்.
* அக்சர் படேலின் 2 ‘மேட்ச் டர்னிங்’ கேட்ச் - இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது.
* அடுத்து சஞ்சு சாம்சன்... 42 பந்துகளில் 89 ரன்களை விளாசி தள்ளினார்.

இந்திய அணிக்கு எதிரான போட்டியில்...
* ஜேக்கப் பெத்தேல்... சஞ்சு சாம்சனுக்கு கேட்சை விட்டதன் மூலம் 50 ரன்கள் கிடைத்தது.
* இரண்டாவது அக்சர் படேல் புரூக்கிற்கு எடுத்த அந்த கேட்ச் கிட்டத்தட்ட 1983 உலகக் கோப்பையில் கபில் தேவ், ரிச்சர்ட்ஸுக்கு எடுத்த கேட்ச் போலத்தான்.
* பும்ராவின் அசாத்திய பந்து வீச்சு. இங்கிலாந்தின் தோல்விக்கு காரணம்.

Related Link
சச்சின் வீட்டு கல்யாணம் - பிரபலங்கள் பங்கேற்பு

சச்சின் வீட்டு கல்யாணம் - பிரபலங்கள் பங்கேற்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒருபுறம் மத்தியஸ்தம்; மறுபுறம் சவுதியுடன் ராணுவ ஒத்துழைப்பு

0
9 mins agoshare
Pakisthan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved