news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news கேரளாவை அச்சுறுத்தும் தொற்று பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

கேரளாவை அச்சுறுத்தும் தொற்று பாதிப்பு

கவனம் தேவை

51

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kerala

கேரள மாநிலத்தில், மூளையை உண்ணும் அமீபா தொற்று பாதிப்பால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகளால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளாவில் இதுவரை மூளையை தின்னும் அமீபா தொற்றுக்கு 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 24 பேருக்கு அமீபா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல், கேரளாவில் பரவி வருகிறது. கோழிக்கோடு, திருவனந்தபுரம், வயநாடு, மலப்புரம், கொல்லம் பகுதிகளில் இந்நோய் பாதிப்பு உள்ளது.

மாசுபட்ட நீரில் வாழும் இந்த அமீபா, மூக்கின் வழியாக மனித மூளைக்குள் நுழைந்து அங்குள்ள திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. மாசுபட்ட நீரில் குளிப்பது, முகத்தை கழுவுவதன் வாயிலாக அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

காய்ச்சல், சளி, தலைவலி, வாந்தி போன்ற அமீபிக் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தொற்றால் இதுவரை 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 24 பேருக்கு அமீபா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
மருத்துவமனைகள் உஷார் படுத்தப்பட்டு இந்தத் தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர கேரள அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
5 hrs 13 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved