news-tamil-logo

3/19/2026, 2:44:47 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பிப்ரவரி 17ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
tv

Also Watch

tv

Read this

பிப்ரவரி 17ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

Posted on: Feb 07, 2026 10:35 AM

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வருகிற 17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 17ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று, சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவை விதி எண் 26/1ன் கீழ் தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 17ஆம் தேதி காலை 9:30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் கூடுகிறது. அன்றைய தினம் 2026 - 2027ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.

மானிய கோரிக்கை தாக்கல்
வரும் 20ஆம் தேதி, பேரவை விதி 193/1ன் கீழ் 2026 - 2027ஆம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. பேரவை விதி 189 /1ன் கீழ் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. வரும் 17ஆம் தேதி அலுவல் ஆய்வுக் குழு கூடி சட்டப்பேரவை எத்தனை நாள்கள் நடைபெறும் என்பதை முடிவு செய்யும்.

இணையதளத்தில் பதிவேற்றம், நேரலை
சட்டப்பேரவை நிகழ்வுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து யார் வேண்டுமானாலும் இணையதளம் மூலம் அதை பார்த்துக் கொள்ள முடியும். அமைச்சரின் பதிலுரைகள், மானிய கோரிக்கைகள், சிறப்பு தீர்மானங்கள் போன்றவை நேரலை செய்யப்படுகிறது. சட்டப்பேரவை விவாதங்களை முழுமையாக நேரலை செய்வது குறித்து சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும்.
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.

வருகிறது சட்டப்பேரவைத் தேர்தல்
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 5ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் ரூ.34,327 கோடி மதிப்பிலான 15 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. எனவே, தமிழக அரசு 2026 -2027 நிதி ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டி உள்ளது.

Related Link
KASக்கு எதிர் வேட்பாளர் - தயங்கும் EPS?

KASக்கு எதிர் வேட்பாளர் - தயங்கும் EPS?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
9 hrs 57 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved