news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தென் மாவட்டங்களுக்கான நேர்காணல், திமுகவில் விறுவிறுப்பு
tv

Also Watch

tv

Read this

தென் மாவட்டங்களுக்கான நேர்காணல், திமுகவில் விறுவிறுப்பு

அண்ணா அறிவாலயம், சென்னை

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திமுகவில் தென் மாவட்டங்களுக்கான நேர்காணல் இன்று நடக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் தொகுதி நிலவரம் குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையிலான தேர்வுக் குழுவினர் கேட்டறிந்தும் வருகின்றனர்.

வருகிறது தேர்தல்...
தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி விட்டது. வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதி, பிரச்சார பொதுக் கூட்டம் என்று, அரசியல் களம் அனல் பறக்க தொடங்கி உள்ளது. திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறது. தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறது.

நேர்காணல் தொடங்கியது
பரபரப்பான தேர்தல் களத்தில், திமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேற்று மார்ச் 17ஆம் தேதி நேர்காணல் நடைபெற்றது. முதல்நாளில், புதுச்சேரி, காரைக்கால் வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்றது. திமுகவில், வேட்பாளர்களாக போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. வேட்புமனு தாக்கல் செய்தவர்களிடம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் தொடங்கி, நடைபெற்று வருகிறது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார். வருகிற 22 ஆம் தேதி வரை தொடர்ந்து நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென் மாவட்ட தொகுதிகளுக்கு...
திமுகவில் தென் மாவட்டங்களுக்கான நேர்காணல் இன்று, மார்ச் 18ஆம் தேதி நடக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் தொகுதி நிலவரம் குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையிலான தேர்வுக் குழுவினர் கேட்டறிந்து வருகின்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலில், போடி தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விருப்பம் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே விருப்பமனு அளித்துள்ள நிலையில், இன்று நடைபெறும் நேர்காணலில் ஓ.பி.எஸ். பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேர்காணல் முழு விவரம்
* மார்ச் 18ஆம் தேதி காலை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி
பிற்பகல் - மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்

* மார்ச் 19ஆம் தேதி காலை கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி
பிற்பகல் - திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி

* மார்ச் 20ஆம் தேதி காலை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை
பிற்பகல் - தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி

* மார்ச் 21 ஆம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர்
பிற்பகல் - புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்

* மார்ச் 22 ஆம் தேதி கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை

நேர்காணலுக்கு பிறகு, வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொடிக்கம்பம் டிரான்ஸ்பார்மரில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து விபத்து

2
9 hrs 22 mins agoshare
கடலூர் மின் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved