பா.ரஞ்சித்தின் நீலம் புரடெக்சன் நிறுவனம் தயாரிக்கும் வெப் தொடர் மூலம் நடிகை ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக உள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'தடாக்' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்நிலையில், களவாணி பட இயக்குனர் இயக்கும் புதிய வெப் தொடரில் ஜான்வி கபூர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.