அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் கடந்த வாரம் சிறிய ரக விமானம் விழுந்து விபத்திற்குள்ளான நிலையில், அருகில் இருந்த உணவகத்தில் அதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.விமானம் விழுந்ததை கண்டு உணவகத்தில் இருந்தவர்கள், தெறித்து ஓடிய நிலையில், விமானத்தின் உலோக துண்டு ஒன்று, உள்ளே உணவருந்திக் கொண்டிருந்த நபரின் தலையில் பட்டதில், அவருக்கு காயம் ஏற்பட்டது.