கடன்வழங்கும் செயலிகள் புற்றீசல் போல பெருகி வருவதை தடுக்க முழுமையான சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக நடத்தப்படும் கடனுதவி செயலிகளின் நிர்வாகிகளுக்கு பத்து ஆண்டு சிறைத்தண்டனையும் ஒரு கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கும் வகையில் இந்த சட்டம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.