மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் இல்லை என அடித்துக் கூறியிருக்கும் அமைச்சர் ரகுபதி, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவித்திருக்கிறார். மேலும், சுடுகாட்டில் தான் பிணத்தை எரிக்க வேண்டும் எனும் போது, அங்கு தான் எரிக்க வேண்டும் என அவர் கூறியது சமூக வலை தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.