news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க எதிர்க்கட்சிகளுக்கு மோடி அழைப்பு
tv

Also Watch

tv

Read this

சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க எதிர்க்கட்சிகளுக்கு மோடி அழைப்பு

டெல்லி

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
modi

துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணனை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது, துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணனை மோடி அறிமுகம் செய்தார். அவரை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் வரவேற்றனர்.

அப்போது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணனை ஒருமனதாக தேர்வு செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து, கிரண் ரிஜிஜூ கூறியதாவது:

சி.பி.ராதா கிருஷ்ணனை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். துணை ஜனாதிபதி பதவிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் மிகவும் பொருத்தமானவர். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். சி.பி.ராதாகிருஷ்ணன் எந்த சர்ச்சையிலும் சிக்காத நபர். அவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. அவர் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து சமூகத்திற்கும் நாட்டிற்காகவும் உழைத்துள்ளார்.

இத்தகைய ஒருவர் நாட்டின் துணை ஜனாதிபதியானால், அது நாட்டிற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் விஷயமாக இருக்கும். துணை ஜனாதிபதி தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றாக ராதாகிருஷ்ணனை ஒருமனதாக ஆதரிக்க வேண்டும். அது நமது ஜனநாயகத்திற்கும், நமது நாட்டிற்கும், மாநிலங்களவையை நடத்துவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று் நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம்!

0
13 mins agoshare
Gold rate








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved